பரவையார் - (1716) ஆளுடைய நம்பிகளின் திருத்தேவியார்களுள் முதல்வர். வரலாறு, திருமலைச் சிறப்பிலும் தடுத்தாட்கொண்ட புராணத்தும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தும் கழறிற்றறிவார் புராணத்தும் வெள்ளானைச் சருக்கத்தும் பார்க்க. பாண்டிமா தேவியார் - (1703) மங்கையர்க்கரசி யம்மையார். பிரமநாடி - (1715) சுழுமுனை நாடி - இடபிங்கலை - இவற்றோடு சேர்த்திமூன்று நாடிகளாக யோகசாத்திரத்துட் பேசப் பெறுவது. பிள்ளையார் - திருஞானசம்பந்த நாயனார். சண்பை மன்னர் (1850); காழி வள்ளலார் (1854); புகலியார் பெருமான் (1851); கவுணியர்க் கிறைவர் (1859); புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்த பூசுரனார் (1860) சேவின் மேலவர் மைந்தராம் திருமறைச் சிறுவர் (1862); சண்பை யாளியார் (1863). புக்கொளியூர் - (1898) திரு அவிநாசி; கொங்கு நாட்டில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. நம்பிகள் முதலைவாய்ப் பிள்ளை யழைத்தருளிய அற்புதம் நிகழ்ந்த தலம். புற்றிடங்கொள் புனிதர் (1884); திருவாரூர்த் திருமூலட்டான நாதர், மணிப்புற்றிலிருந்தார். (1896). பூந்தராய் (1849) சீகாழியின் 12 பெயர்களுள் 6-வது பெயர். பெருநம்பி - (1969) முன்னாள் வழங்கிய சிறந்ததொரு குலப் பட்டப்பெயர். "பெருநம்பி குலச்சிறை." பெருமிழலை - (1706) பெருமிழலைக் குறும்ப நாயனார் தலம். தலவிசேடம். (பக். 815) பெருமிழலைக்குறும்பர் - (1707) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் சரிதச் சுருக்கம். lll பக். 814. மணமேற்குடி - (1695) குலச்சிறை நாயனார் தலம்; தலவிசேடம் lll பக். 797 மிழலைநாடு - (1706) பெருமிழலைக் குறும்ப நாயனாரது நாட்டின் பெயர். மூத்த திருநாவுக்கரசு - (1805) அப்பூதியடிகளின் மூத்த மகன். மூத்த திருப்பதிகம் - (1779) அம்மையார் பாடிய திருவலாங்காட்டுத் திருப்பதிகங்களிரண்டின் பெயர். தேவாரங்களின் முன் பதிகம் என்ற அமைப்பில் முதலிற் பாடிய படியால் மூத்த பதிகம் எனப்படுவன. வீதி விடங்கப் பெருமான் - (1885 - 1892) திருவாரூர்த் தியாகேசர். திருவாரூர் மன்னர் (1886); தெய்வப் பெருமாள் (1894). சிவபெருமான் கண்ணுதல் - (1697); சங்கரன் 1698; 1772; அம்புலியிலகு செஞ்சடையார் 1699; ஆதிதேவர் 1701; ஆறணி நாயனார் 1703; சென்னிமதியம் வைத்தவர் 1707; உமையாள் கேள்வன் 1708; முதல்வர் - 1711; ஏறுகொடி மேலுயர்த்தவர் 1712; நஞ்சுண்ட வமுது 1713; தேவர் பெருமான் 1713; சிவன் 1714; மூலமுதல்வர் 1715; கயிலைப்பொருப்பர் 1716; பண்யணிவார் 1719; விடையவர் 1720; வளர்மதியம் புனைந்தசடை அண்டர்பிரான் 1721; பொருவிடையார் 1730; நம்பர் 1731; உம்பர்பிரான் 1731; பணவரவம்புனைந்தருளும் பரமனார் 1733; வேதங்கள் மொழிந்தபிரான் 1734; விடையவன் 1735; உற்ற விடத்துதவும் விடையவர் 1741; அருளுடையார் 1743; மைதழையுங் கண்டர் 1744; ஈசன் 1745; தேசுடைய சடைப்பெருமான் 1745; பணியணிவார் 1746; கொன்றைவார் சடையினார் 1764; பரமர் 1765; மன்றுளாடுவார் 1766; உமை |