பக்கம் எண் :


792திருத்தொண்டர் புராணம்

 

திருத்தொண்டத் தொகை - (1709) திருவாரூர்ப் பெருமான் அருளால் ஆளுடைய நம்பிகள் அருளிய திருப்பதிகம். திருத்தொண்டர் புராணத்துக்கு முதனூல்.

திருநீலகண்டப் பெரும்பாணர் - (1851) திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவர். திருவெருக்கத்தம் புலியூரில் பாணர் மரபில் அவதரித்தவர். யாழ் வாசித்தலிற் சிறந்தவராதலின் யாழ்ப்பாணர் எனப் பெறுவர். திருவாலவாயில் இறைவர்பால் இருந்து யாழ் வாசித்தற்குப் பொற் பலகையிடப்பெற்றவர். திருஞான சம்பந்தரின் நட்புப் பெற்று அவர் திருக்கூட்டத்துடனே பல தலங்களிலும் சென்று அவர் திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசித்துப் பிரிவின்றிச் சேவித்து வந்தவர். இவர்தம் தாயார் பிறப்பிடமாகிய திருத் தருமபுரத்தில் இவர் வேண்டுகோளின்படி யாழிலடங்கா வகை யாழ்மூரிப் பதிகத்தைப் பிள்ளையார் பாடியருளிய வரலாறுபற்றி அவர்தம் புராணம் 444 - 453 பாட்டுக்கள் பார்க்க. பிள்ளையாரது திருமணத்தில் அவருடனே திருக்கூட்டத்தில் இறைவரடி சேர்ந்தார். சகோட யாழ்த் தலைவர். (1858).

திருநீலநக்கநாயனார் - (1831) 63 நாயன்மார்களுள் ஒருவர். சரிதச் சுருக்கம் (பக். 1044 -1045) திருநீலநக்கனார். (1856).

திருமணலி - (1887) திருவாரூருக்கு அருகில் 7 நாழிகையளவில் உள்ள ஒருசிற்றூர். அங்குத் திருவாரூரினின்றும் இறைவர் திருஎழுச்சி செல்லும் சிறப்பு முன்னாளில் நிகழ்ந்தது.

திருவாரூர் - (1871) சோழநாட்டுத் தலம். தலவிசேடம் பார்க்க.

திருவாலங்காடு - (1777, 1778, 1779) தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று. அம்மையார் மூத்த திருப்பதிகங்க ளிரண்டினாலும் பாடல்பெற்ற தலம். இறைவரது மேல்எடுத்த திருவடியின்கீழ் அம்மையார் பாடிக்கொண்டு என்றும் வாழ்ந்திருக்கும் தலம். தலவிசேடம் 899.

திருவிரட்டைமணிமாலை - (1769) காரைக்காலம்மையார் சிவபூத கணவடிவு பெற்றுக் கயிலைக்குச் செல்லும் வழியில் பாடியநூல்; கலித்துறையும் வெண்பாவுமாக விரவி அந்தாதித் தொடையாக வரும் இருபது பாட்டுக்களா லாகியது. நூலும் உரையும் பார்க்க. (940 - 948)

திருப்பழனம் - (1793, பழனமூதூர் 1824) சோழநாட்டில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. தலவிசேடம் lll. (பக். 331 - 1005)

நமிநந்தியடிகள் நாயனார் - (1869) 63 நாயன்மார்களுள் ஒருவர். சரிதச் சுருக்கம். தொண்டர்க்காணி. (1896)

நாகை - (1723) நாகப்பட்டினம்; கடற்றுறைமுகப் பட்டினம், சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. தலவிசேடம். lll 491 - பார்க்க.

நாவலூராளி - (திருத்தொண்டர் திருவந்தாதி - 27) சுந்தரமூர்த்திகள் நம்பி (1709) நம்பியாரூரர் (1711) வன்றொண்டர் (1712) பரவைகேள்வன். (1716)

நிதிபதி (1723) காரைக்காலம்மையாரது கணவனுடைய தந்தை.

நெடுமாறன் - (1702) பாண்டிய அரசர். கூன்பாண்டியராயிருந்து திருஞானசம்பந்தரது திருவருளால் நின்றசீர் நெடுமாற நாயனாராயினவர். மங்கையர்க்கரசியாரின் கணவனார். இவர்பால் குலச்சிறையார் அமைச்சராயிருந்து இவரைச் சமணத்தினின்றும் ஏற்றிச் சைவத்திற் கொணர்ந்தனர்.

பகலவன் - (1855) சூரியன்.

பரம தத்தன் - (1744) காரைக்காலம்மையாருடைய கணவன்.