முற்சேர்க்கை - 4 பெயர் விளக்கம் அணிமா - எண்வகைச் சித்திகளுள் முதலாவது (1711) ஆண்டவரசு - திருநாவுக்கரசு நாயனார்; (1783 - 1801) வாக்கின் வேந்தர் (1785) திருநாவுக்கரசர் (1786, 1798, 1818, 1825) வாகீசர் (1785 - 1800) முனிவர் (791) கோதின் மொழிக் கொற்றவனார் (1794) அன்பர் (1815) பெரியவர் (1816) நாவினுக்கரசர் (1817) சொல்லரசர் (1820) அந்தமிழாளியார் (1828) நாவின் மன்னர் (1824) அருந்தவர் (1808) தொண்டர் (1810) தொண்டனார் (1812). அப்பூதியார் - அப்பூதியடிகணாயனார் - 63 நாயன்மார்களுள் ஒருவர். சரிதச் சுருக்கம். பக்க 1000 - 1002. அப்பூதியடிகளார் - 63 நாயன்மார்களுள் ஒருவர். அப்பூதியடிகளார் (1789 - 1791) அப்பூதியார் (1827) மறையோர் (1822) மாதவ மறையோர் (1824). அயவந்தி - திருச்சாத்தமங்கையிலுள்ள சிவபெருமானது திருக்கோயிலின் பெயர் (1884). அரநெறி - சோழநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று, திருவாரூர்ப் பூங்கோயிலினுள் தென்கீழ்த் திசையில் உள்ள தனிக்கோயில். நமிநந்தியார் திருப்பணி செய்ததும் அவர் நீரால் விளக்கெரித்த சரித நிகழ்ச்சி நடந்ததுமாகிய தலம். தலவிசேடம் பார்க்க. அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார் பேயாகிய சிவபூத கணவடிவு பெற்றுக் கயிலைக்குச் செல்லும் வழியில் பாடியருளிய நூல். 100 வெண்பாக்களால் ஆகியது. நூலும் உரையும் பார்க்க. (900 - 938) ஏமப்பேறூர் - நமிநந்தியடிக ணாயனாரது தலம். தலவிசேடம் பார்க்க. கன்னிநாடு - பாண்டியநாடு - தமிழ்த்திரு நாடு.(1750) காவிரிநாடு - சோழநாடு. பொன்னித் திருநாடு. (1818) காரைக்கால் - (1717) காரைக்காலம்மையார் தலம். தலவிசேடம். 899. காரைக்காலம்மை - பேயார் - 63 நாயன்மார்களுள் ஒருவர். சரிதச் சுருக்கம் பக்.893 - 896 - புனிதவதியார் (1718). குலச்சிறை நாயனார் - 63 நாயன்மார்களுள் ஒருவர். குலங் காப்பவர் என்பது சொற்பொருள். சரிதச் சுருக்கம். (796) குறும்பனார் - (1707) பெருமிழலைக் குறும்பநாயனாருக்கு மரபால் வந்தபெயர். கொடுங்கோளூர் - (1712) கழறிற்றறிவார் என்னும் சேரமான் பெருமாள் நாயனார் அரசாண்ட தலைநகரம். சேர நாட்டில் உள்ளது. அவர் புராணம் பார்க்க. திருக்கயிலை - (1714) சிவபெருமானது திருமலை. திருமலைச் சிறப்பும், திருநாவுக்கரசு நாயனார் புராணம் (1612-1647) பாட்டுக்களும் பிறவும் பார்க்க. திருமலை - வெள்ளிமலை (1769 - 1713). கயிலை வெற்பு - (1771). திருச்சாத்தமங்கை - (1818) சோழநாட்டில் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. திருநீலநக்க நாயனாரது தலம், தலவிசேடம் (பக் - 1046) |