பக்கம் எண் :


808திருத்தொண்டர் புராணம்

 

23. பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்

தொகை

"பெருமிழலைக் குறும்பர்க்கும் (பேயார்க்கும்) அடியேன்"

- திருத்தொண்டத் தொகை

வகை

"சிறைநன் புனற்றிரு நாவலூ ராளி செழுங்கயிலைக்
 கிறைநன் கழனாளை யெய்து; மிவனருள் போற்றவின்றே
 பிறைநன் முடிய னடியடை வேனென் றுடல்பிரிந்தான்
 நறைநண் மலர்த்தார் மிழலைக் குறும்ப னெனுநம்பியே"

(27)

- திருத்தொண்டர் திருவந்தாதி

விரி

1706.

சூக நெருங்கு குலைத்தெங்கு பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
விதி தோறு நீற்றினொளி விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய் நிலவங் குடியா னெடுநிலத்து
மீது விளங்குந் தொன்மையது மிழலை நாட்டுபபெருமிழலை.

1

புராணம் :- பெருமிழலைக் குறும்ப நாயனாருடைய பண்பும் சரித வரலாறும் கூறும் பகுதி இனி நிறுத்த முறையானே திருநின்ற சருக்கத்து மூன்றாவது பெருமிழலைக் குறும்ப நாயனாரது புராணங் கூறத் தொடங்குகின்றார். இளையான்குடிமாறர் என்பதுபோல, பெருமிழலை என்பதும் ஊரும், குறும்பர் என்பது அவருடைய மரபின் பெயருமாம். நாயனாரது இயற்பெயர் விளங்கவில்லை.

தொகை :- பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கும் (பேயார் என்னும் காரைக்காலம்மையாருக்கும்) நான் அடியேனாவேன். திருத்தொண்டத் தொகையினுள் ஒரு பாசுரத்தின் ஓரடியின் பாதியினுள் இரண்டு அடியார்களைச் சேர்த்தும் போற்றிய இரண்டாவது இடம், இவ்வாறு சேர்த்துப் போற்றிய மூன்றாவது இடம் "நாட்டமிகு தண்டிக்கு மூர்க்கர்க்கு மடியேன்" என்ற ஐந்தாவது திருவிருத்தத்துட் காண்க. ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பதினோராவது திருப்பாட்டுக்களுள் சேர்த்துப் போற்றுவன மற்றொருவகை.

வகை :- சிறை நன்புனல் - முன்னர்ச் சிறையில் தடையுண்டு நின்று பின்னர்ச் சிறை நீங்கிய நற்புனல் கடல் எய்துவதுபோல, திருநாவலூராளி.....எய்தும் - திருநாவலூர்த் தலைவராகிய ஆளுடைய நம்பிகள் செழுங்கயிலாய தலைவராகிய இறைவரது நற்கழல்களை நாளை எய்துவர்; "இவனருள்...அமைவேன்" என்று உடல் பிரிந்தான் - "இத்தகையோ ரருளினைப் போற்ற நற்பிறைசூடிய முடியுடைய சிவபெருமானுடைய திருவடிகளை இன்றே அடைவேன் என்று துணிந்து தமது உடலைப் பிரிந்ணர்; நறை....நம்பியே - தேன் பொருந்தி நன்மலா மாலை யணிந்த மிழலைக் குறும்பரென்னும் நம்பியே.

சிறை நன்புனல் : முன்னர்ச் சிறையிற்றடைப்பட்டு நின்று, இப்போது அவை தடை நீங்கிப் "பள்ளந்தா ழுறுபுனல்" என்றபடி தன் வழியே செல்லும் வாய்ப்பு பெற்ற நல்ல புனல்போல, சிறை என்றதனால் முன்னர்ச் சிறைப்பட்ட என்பது