விளங்கும் ஊராகும்; நீதி...தொன்மையது - வேதநீதி வழுவாத நல்லொழுக்கத்தில் நின்று நிலவும் குடிகளின் பெருமையால் நீண்ட வுலகில் விளங்கும் பழமையை யுடையது. (வி-ரை.) சூதம் தெங்கு பலவும் பூகம் - எண்ணும்மைகள் தொக்கன. நெருங்கு குலைத் தெங்கு - குலைகள் நெருங்கியனவும், குலைகளிற் காய்கள் நெருங்கினவுமாகிய தென்னை. பலவு - பலா. "குறியதன் கீழாக் குறுகலு மதனோ, டுகர மேற்றலும்" என்றபடி, பலா என்பது பலவு என நின்றது; நிலா - நிலவு என்பது போல. புடை - பக்கத்துச் சூழம் புறம் பணை. புடைத்து - படையினையுடையது. வீதிதோறும் நீற்றினொளி மேவு - லாவது - திருநீற்றினொளி விளங்கும் நெறியினுள்ளா நிறைந்து விளங்குவன வீதிகள் என்றதாம். நீதிவழுவா நெறியினர் என்று இதனை மேலும் விளக்கியவாறும் காண்க. நீதி வழுவா நெறி - வேதங்களிற் சொல்லிய விதி விலக்குக்களை அறிந்து அந்நெறியிற் பிறழாத ஒழுக்கம். "வேதநீதி மிழலை" (1705) என்று தோற்றுவாய் செய்தது காண்க. குடியால் - குடிகள் நிறையும் பெருமையினால். தொன்மையது - பழமையுடையது. பழமையாவது நீண்ட காலமாகப் பெருமை மாறாதது நிலவும் புகழ். "தொல்புகழ்" (1695). அதுவே சிறப்புத் தருவதாம் என்று வலியுறுத்த மேலும் "தொன்மைத் திருப்பதி" (1707) என்பது காண்க. மிழலை நாட்டுப் பெருமிழலை - மிழலை - நாட்டின் பெயர். பெருமிழலை தலைநகரின் பெயர். பெருமிழலை என்ற பெயரால் பல நாடுகளில். பலவூர்கள் உளவாதலின் அவற்றினிடை மாநகரது பிரித்துணர்தற் பொருட்டு மிழலை நாட்டுப் பெருமிழலை என்றார். "மிழலைநாட்டு மிழலை வெணிநாட்டு மிழலையே" (தேவா - நம்பி - திருநாட்டுத்தொகை - இந்தனம் - 5); சோழநாட்டு விழிமிழலையும் கருதுக. பெரு என்ற சிறப்பு அடைமொழி வழக்கும் அந்நாட்டின் அப்பெயர் கொண்ட ஏனை ஊர்களினின்றும் பிரித்துணர வைப்பதாம். இதனால் நாட்டுச் சிறப்பும் குடிச்சிறப்பும் கூறியவாறு. பெருமிழலை - விளங்கு பதி; தொன்மையது என்று முடிக்க. 1 1707. | அன்ன தொன்மைத் திருப்பதிக்க ணதிபர் மிழலைக் குறும்பனார் சென்னிம "திபம் வைத்தவர்த யடியராக கான செய்பணிகள் இன்ன வண்ண மென்றவர்தா முரையா முன்ன மெதிரேற்று முன்ன முணர்ந்துசெய்வாராய் முதிரு மறிவின் பயன் கொள்வார்; |
2 1708. | தொண்டர் பலரும் வந்தீண்டி யுண்ணத் தொலையா வமுதூட்டிக் கொண்டுசெல்ல விருநிதிய முகந்துகொடுத்துக் குறைந்தடைவார் வண்டு மருவுங் குழலுமையாள் கேள்வன் செய்ய தாளென்னும் புண்ட ரீக மகமலரில் வைத்துப் போற்றும் பொற்பினார். |
3 1707. (இ-ள்.) அன்ன...மிழலைக் குறும்பனார் - அத்தகைய பழமையாகிய திருநகரத்தின் கண்ணே குறுநில மன்னராகிய மிழலைக் குறும்பனார்; சென்னி...செய்வாராய் - தலையிற் பிறையை வைத்த இறைவருடைய அடியவர்களுக்கு ஆயின்செய் பணிவிடைகளை யெல்லாம் இன்னின்னவை என்றும் இன்னின்னபடி என்றும், அவர்கள் தாம் எடுத்துச் சொல்லாத முன்னமே எதிர்கொண்டு விருந்தாக ஏற்று அவர்களது குறிப்புணர்ந்து செய்வாராகி; முதிரும் அறிவின் பயன் கொள்வார் முதிர்ந்த அறிவு பெற்ற பயனை அடைவாராகி; 2 |