இயக்கம் மலைகளினின்று இறங்கி வந்தேன் கடல்களினின்றும் மூழ்கி வந்தேன் நதிகளும் நகர்ப்புறமும் சுற்றி வந்து அடர்ந்த காடுகள் சுற்றி வந்தேன் எங்கும் உயிரணுக்களின் இயக்கம் ஒரு கணத்தின் அணுப்பிளவில் வெளிவந்தேன் ஒளியினும் வேகம் மிகுந்து மூச்சுவிட்டேன் மூச்சு இன்றி - இயல்பாகவே அக்கணம் உணர்ந்தேன் நான் இறந்து நேரம் கழிந்ததை |