பக்கம் எண் :

104ஆத்மாநாம் படைப்புகள்

இரவில் பேய்கள்

குருட்டுக் கண்களைத்
திறந்து பார்த்தால்
இருட்டுத்தான்
பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளைக்
கூராக்கி முயற்சித்தால்
நிசப்தம்தான்
கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை
நுழைத்துப் பார்த்தால்
சாக்கடை மணம்
சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன்
உடல் மாறி
மனம் மாறின பின்