அவசரம் அந்த நகரத்தில் இருவர் கூடினால் கூட்டம் நால்வர் கூடினால் பொதுக்கூட்டம் சாலையில் கூட்டமாய்ச் செல்லக் கூடாது வீட்டுக்குள் யாரும் நடக்கலாம் ஒவ்வொரு வீடும் தார்ச்சாலையால் இணைக்கப்பட்டிருக்கும் மறைவிடங்கள் அங்கில்லை குளிப்பவர்கள் கூட்டங்கூட்டமாய்க் குளிக்க வேண்டும் தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவில் மட்டும் சிகரெட் பிடிக்கவும் அங்கு தடை ஆஷ்ட்ரேயை அதிகாரி பார்த்தால் அவரை நகரத்தின் சகாராவுக்கு அனுப்புவார் அங்கே ஏற்கனவே உள்ளவரோடு சேர்ந்து அதனைப் பசுமையாக்க வேண்டும் நகரத்தில் தள்ளிப்போடாத அவசரம் உள் நாட்டு மனத் தெளிவு நகரத்தின் மக்களுக்குக் கிடைக்கும் ஒரே டானிக் கடுமையான உழைப்பு பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை அதை வாங்கு இதை வாங்கு என்று மலிவாக ஏராளமாகக் கிடைத்தது நகரத் தலைவரின் பொன் மொழிகள் எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள் மந்திரிகள் அவரைப் புகழ்ந்தார்கள் அரசாங்க அதிகாரிகள் புகழ்ந்தார்கள் மக்கள் சுபிட்சமாய் இருந்தனர் அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து |