இந்த நகரத்தை எரிப்பது இந்த நகரத்தை எரிப்பது மிகச் சுலபம் ஒரு தீப்பெட்டி போதும் தீப்பெட்டி விலை மிக மலிவு ரொட்டியின் விலையைவிட மிகமிக ஒரு லிட்டர் கிரஸினும் வேண்டும் அதுவும் கிடைக்கும் அரசின் சீரிய வினியோகிப்பில் ஓசைகள் குறைந்த நள்ளிரவில் எங்கேனும் துவங்கலாம் துணிவுள்ளவன் விழித்திருந்து அனுமான் எரித்தான் லங்கையை வாலில் தீ வைத்தபோது வானைத் தொட்ட தீ தணிந்தது எழுந்தது புது லங்கை அழிந்தானா ராவணன் போராடினான் நாட்கணக்கில் மடிந்தான் குருதி வெள்ளத்தில் இன்றும் அனுமான்கள் உண்டு வாலின்றி ராவணர்களும் உண்டு தீயுண்டு நகரங்கள் உண்டு தனியொருவன் எரித்தால் வன்முறை அரசாங்கம் எரித்தால் போர்முறை |