பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்119

ஸேவிங்ஸ் பாங்க்காரர்களை
உயர்திரு இலக்கியவாதிகளை
முற்போக்கு மடையர்களை
நாடகக் கூத்து ஸினிமாக்காரர்களை
அவர்களை இவர்களை உவர்களை

 

They, All of them, Know என்ற தலைப்பிட்ட CharlesBukowskiயின் கவிதையை முன்மாதிரியாகக் கொண்டு இக்கவிதை எழுதப்பட்டது என்பதைக்கணையாழி யில் இக்கவிதை வெளிவந்த போது ஆத்மாநாம் என்னிடம் குறிப்பிட்டார். Charles Bukowski யின் நீண்ட கவிதை என்னால் மொழிபெயர்க்கப்பட்டு ஸ்வரம்-7(1982)ல் வெளிவந்திருக்கிறது.