இவர்களை எல்லாம் எனக்குத் தெரியும் இவர்களை எல்லாம் எனக்குத் தெரியும் லாரிக் கம்பெனி ஓனர்களை ஆம்னி பஸ் முதலாளிகளை பெரிய நடுத்தர சிறிய தொழிலாளர்களை சொகுசாய்க் காரில் திரும்பும் கம்பெனி அதிகாரியை ஸ்கூட்டரில் திரும்பும் கண்காணியை சைக்கிளில் நடந்து திரும்பும் தொழிலாளியை எஞ்சினியரை டாக்டரை வக்கீலை அவனை இவனை தெருப் பொறுக்கியை பணம் பெருக்குவதிலேயே குறியாய் இருக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை கோவிலிலிருந்து திரும்பும் மாமியை டீக்கடை மாஸ்டரை காஸ் ஏஜென்ஸி நடத்துபவரை பால் விநியோகம் செய்பவரை தினசரி பேப்பர் போடுபவரை பேப்பர் போடும் பையனை சைக்கிள் கடைக்காரரை வல்கனைஸிங் செய்பவரை விறகு டிப்போக்காரரை கருமாரி அம்மன் தீட்சிதரை பெருநகர் போக்குவரத்தை பெருநகர்ப் போக்குவரத்து ஊழியர்களை டாக்ஸி ஆட்டோ ட்ரைவர்களை மளிகைக் கடைக்காரரை தேசியமயமான வங்கிகளை |