அமைதி அமைதி - 1 அமைதி அமைதி அண்டமெங்கும் பேரமைதி நிலவுமிவ்வேளையில் உங்கள் மூச்சுக்காற்றின் ஒலிகூட இருட்டுக் குகைகளில் அதல பாதாளங்களில் பேரொலியாய் எதிரொலிக்கிறது உங்கள் மூச்சைச் சீராக ஒலியின்றிக் காலம் நீட்டி அமைதியாய் வெளிவரச் செய்யுங்கள் இசை நாட்டியம் கலை இலக்கியம் யாவும் நம்மை மகிழ்விப்பதற்கே நம்மை மட்டும் அறிவதற்கே இன்றைக்கு மலைவாழ் பழங்குடியினர் தவிர எவரும் பசியால் வாடவில்லை உண்மை பதறாதீர்கள் எந்தக் குடி முழுகிவிட்டது அமைதியாய் இதமாய் ஓசையின்றி மூச்சுவிடுங்கள் வளமான எதிர்காலத்துக்கு உழைப்பின்றி இட்டுச் செல்ல தேசிய பரிசுச்சீட்டுகளின் புதிய வரிசை வெளிவந்துள்ளது எதற்காகப் பதறுகிறீர்கள் அமைதி அமைதி |