புறநகர் யாரையும் எதிர்பார்க்காத நாள் பெரிதாய் வேலை ஏதுமில்லை சில பக்கங்களைப் புரட்ட முடிந்தது இசைப்பொட்டி இயங்கிற்று பொழுது நகர்ந்துவிட்டது மாலை படிக்கட்டில் அமர உலகம் வியர்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தது எரிபொருள் பொறுக்கும் குறத்தி பள்ளிப் பெண்கள் சீருடையின்றி காகிதம் தின்னும் ஆவினங்கள் வேலையில் கசங்கி முகம் கோணிய மனிதர்கள் திரும்பும் பேருந்துகளில் சற்றே தெளிந்த முகங்கள் புறப்படும் பேருந்துகளில் என் வானொலித்துக்கொண்டிருக்கிறது சிறிய நிறுவனங்களில் அமைதி நிலவுகிறது மாலை இதழ்கள் பரபரப்புடன் திரித்துக்கொண்டிருந்தன தேனீர்க் கடைகளில் அரசியல் சூடாகக் கிடைக்கிறது கட்சி வேறுபாடின்றிப் பொது மக்கள் திருப்தியாயிருக்கிறார்கள் வெளிப்படையான கலவரம் குழப்பம் தெளிவின்மை எதுவுமின்றி நகர்ப்புறம் அமைதியாகவே ஊர்கிறது |