பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்127

உண்மை

உண்மை பேசுகையில்
கடவுள் உன்னுள் இருக்கிறார்
என்ற மூதாட்டி மரித்து
ரொம்ப நாளாச்சு

நான் உண்மை மட்டும் பேசுகையில்
உலகிற்கு
நீ ஒரு பொய்யன்
நீ ஒரு சந்தர்ப்பவாதி
நீ ஒரு சமூகவிரோதி
நீ ஒரு தேசத்துரோகி
இன்னும் பிற
நான் கூறிய ஒரே பொய்
கடவுள் இருக்கிறார்