போய்யா போ நான் ஒரு கெட்டவன் நான் பீடி பிடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் இலைச்சுருள் பிடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் ஒரு சிகரெட் பிடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் ஒரு பில்டர் சிகரெட் பிடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பில்டர் கிங்ஸ் பிடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் சுருட்டு பிடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பைப் பிடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் மூக்குப்பொடி போடுபவன் நான் ஒரு கெட்டவன் நான் வெற்றிலைப்பாக்கு போடுபவன் நான் ஒரு கெட்டவன் நான் புகையிலை போடுபவன் நான் ஒரு கெட்டவன் நான் ஜர்தா பீடா போடுபவன் நான் ஒரு கெட்டவன் உள்ளாடையும் பனியனும் அணிபவன் நான் ஒரு கெட்டவன் நான் பேண்ட்டும் ஷர்ட்டும் அணிபவன் நான் ஒரு கெட்டவன் நான் காரில் போகிறவன் நான் ஒரு கெட்டவன் நான் டாக்ஸியில் போகிறவன் நான் ஒரு கெட்டவன் நான் ஆட்டோவில் போகிறவன் நான் ஒரு கெட்டவன் நான் சைக்கிள் ரிக்ஷாவில் போகிறவன் நான் ஒரு கெட்டவன் நான் சைக்கிளில் போகிறவன் நான் ஒரு கெட்டவன் நான் பேருந்தில் போகிறவன் |