பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்183

செடி

சாக்கடை நீரில் வளர்ந்த
ஒரு எலுமிச்சைச் செடி
போல் நான்
அளிக்கும் கனிகள்
பெரிதாகவும் புளிப்புடனும்
தானிருக்கும்
கொஞ்சம் சர்க்கரையைச்
சேர்த்து அருந்தினால்
நல்ல பானகம் அல்லவோ