விடுதலை கண்ணாடிச் சிறைக்குள் கண்ணாடிச் சிறை அக்கண்ணாடிச் சிறைக்குள் நான் அக்கண்ணாடிச் சிறையைத் திறந்து வெளி வர முயல்கிறேன் திறக்கும் வழியே இல்லை எரிச்சலுற்று உடைத்து வர நினைக்கிறேன் உள் மனப் போருக்குப் பின் முயற்சியை விடுத்து சும்மா இருக்க முடிவெடுக்கிறேன் கண்மூடித் திறக்குமுன் கண்ணாடிச் சிறையைக் காணோம் எங்கும் முன்பிருந்த அதே ஒளி |