இயக்க விதி என் மனம் ஓர் கண்ணாடி வண்ணங்கள் அற்ற ஒலி ஒளி அசையும் அசையாப் பொருட்கள் வெளி உள் மற்றும் அகண்ட கருத்துக்கள் கேட்ட மற்றும் படித்த காலம் எப்புறமும் பறந்த அனைத்தும் உட்சென்று வெளியேறும் இரு பக்கமும் இருக்கும் போல் தோன்றி ஒரே பக்கமாய் இயங்கும் அற்புதம் இந்நிலையில் இக்கண்ணாடி இவ்வுலகெங்கும் ஒன்றெனின் அக்கண்ணாடி பல கூறு ஆன ஒன்று போலும் |