குந்தர் க்ராஸ் உருமாற்றம் திடீரென்று செர்ரீக்கள் இருந்தன அங்கே ஏதோ செர்ரீக்கள் இருப்பதை நான் மறந்து அங்கீகரிக்கப்படும் நிமித்தமாய்; அங்கு செர்ரீக்கள் இல்லாமலே இருந்ததாக - அவை அங்கிருந்தன. திடீரென்று அன்புடன் ப்ளம்கள் என்மேல் விழுந்து தாக்கின; எனினும் நான் மாறிவிட்டேனென்று எவரெவர் நினைத்தாலும் ஏனெனில் ஏதோ விழுந்து என்னைத் தாக்கி ப்ளம்களால் அது என்றும் தாக்கப்படாத ஒன்றாக என் காலணிகளில் அவர்கள் கொட்டைகளை நிறைத்தபோது மட்டும் நான் நடக்க வேண்டியிருந்தது காரணம் குழந்தைகளுக்குப் பருப்பு வேண்டியிருந்தது நான் கதறினேன் - செர்ரீக்களுக்காய் வேண்டினேன் ப்ளம்கள் எனைத் தாக்க மாறினேன் ஒரு சிறிது. |