நஸீம் ஹிக்மத் ஞாயிறு இன்றைக்கு ஞாயிறு இன்றைக்கு. முதன்முதன்முறையாக. நான் வெளியே வெயிலில் சுற்ற அவர்கள் அனுமதித்துள்ளார்கள் முதன்முறையாக என் வாழ்க்கையில் நான் வானத்தைத் தொடர்ந்து பார்க்கிறேன் திகைப்புற்று அதன் இவ்வளவு தொலைவு இவ்வளவு பரப்பு இவ்வளவு நீலம். என் முதுகு வெள்ளைச்சுவரில் பதிய, கண்ணியம் நிறைந்து நான் தரையில் அமர்ந்துள்ளேன். அலைகளில் அமிழும் எந்தக் கேள்வியும் இப்போது இல்லை. எந்தப் போராட்டமும் இல்லை எந்தச் சுதந்திரமும், எந்த மனைவியும். பூமி சூரியன் மற்றும் நான் நான் ஒரு சந்தோஷமான மனிதன். துருக்கி மூலம் : நஸீம் ஹிக்மத் |