டபிள்யூ. பி. யேட்ஸ் படிப்பாளிகள் தம் பாவங்களை மறக்கும் வழுக்கைத் தலையர்கள் வயதான படித்த, மரியாதைக்குரிய வழுக்கைத் தலையர்கள் வரிகளைப் பதிப்பித்து உரை விளக்கி அந்த இளம் மனிதர்கள் படுக்கையில் புரண்டு காதலின் மனமுறிவைச் சந்தமாக்குவர் அழகின் அறிவிலிக் காதுகள் மகிழ்ச்சியுற எல்லோரும் கூடிக்கலைவாரங்கே; எல்லோரும் கையில் இருமுவர்; எல்லோரும் தம் காலணிகளுடன் கார்பெட் அணிவர்; எல்லோரும் சிந்திப்பர் மற்றவர் சிந்திப்பதையே; எல்லோரும் தெரிவர் அண்டை வீட்டாருக்குத் தெரிந்த மனிதனையே. ஆண்டவரே என்ன சொல்வர் அவர்கள் அவர்களின் காட்டுலஸ் அவ்வழி நடந்தால்? அயர்லாந்து மூலம் : டபிள்யூ. பி. யேட்ஸ் குறிப்பு: காட்டுலஸ் - ஜு லியஸ் ஸீஸரின் சம காலத்தவர். புராதனலத்தீன் கவிஞர்களில் மிகப் புதுமையானவர். (கணையாழி, மே 1982) |