பகல் வெளிச்சத்தில் என்னிலிருந்து நழுவிச் செல்லும் அந்தக் கவிதை தனக்குள் தானே சில சமயங்களில் மட்டும் அதன் கசப்பை உணர்கிறேன் மற்றும் அதன் உட்கதகதப்பை ஆனால் நான் அதனை வெளியே இழுப்பதில்லை அதன் இருண்ட வெறுமையான ஆழத்திலிருந்து உண்மையின் தாழ்ந்த கரைக்கு பிறக்காது தூள் தூளாய் நொறுங்கும் ஒரு உலகின் வெறுமையை நிரப்புகிறது தெரியாத பேச்சைக் கொண்டு *இதன் வேறொரு மொழிபெயர்ப்பு வடிவத்தை என்னுடைய உலகக்கவிதை (1989 மீட்சி வெளியீடு, பக். 94) - தொகுதியில் பார்க்கலாம். |