பக்கம் எண் :

220ஆத்மாநாம் படைப்புகள்

அடைய நினைக்கும் மனம் ஆகியவற்றில் மனம் இழக்கிறார். உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர். கோவிலுக்கு அதிகம் வழிபடப் போகாதவர். மனித சக்திக்கு மீறிய ஒன்று மனிதனிடம்தான் உள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். கவிதைகளின் வெற்றி தோல்விகள் பற்றிய விவாதம் அபத்தம் என்று நினைக்கிறார். தன்னிலிருந்து தானே விடுபடும்போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான். இவை கவிதைகள் என்றால் கவிதைகள்தான். கவிதைகள் இல்லை என்றால் என்ன செய்வது? ஆத்மாநாமைப் பொறுத்தவரை இவை கவிதைகள்தான். அவரைப் பொருத்தவரை இந்த வரையறையில்தான் ஆத்மாநாமுக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு தெரிகிறது. இருவருக்கு இடையே உள்ள மெல்லிய கண்ணாடித் திரையை உடைக்கப் பார்க்கும்போது அவை தடித்த இரும்புச் சுவர்களாகி விடுகின்றன. இது அறிவு என்றால் இது கவிதை.

*இந்தச் சுய அறிமுகக் கட்டுரையை ஆத்மாநாம் தனது 25வது வயதில் எழுதியிருக்கிறார். அமைப்பியல் கவனப்படுத்திய Reader Reception Theoryயை அன்றே (1976) முன்னோக்கி இருப்பது ஆச்சிரியத்தைத் தருகிறது. 1981ஆம் ஆண்டு திரு. யேசுராஜா, திரு. சுந்தரராமசாமி இவர்களுடனான சந்திப்பில் Cre-Aவில் இதே விஷயத்தை உறுதிப்படுத்திப் பேசியதாக என்னிடம் கூறியிருக்கிறார். அதாவது கவிதை எழுதப்பட்ட பின்பு கவிஞனுக்கே புரியாமல்கூடப் போகலாம். ஆனால் கூர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் கவிதையை அணுகிவிடமுடியும்.