சில கவிதைகள் கருத்துருவங்களிலிருந்து வருகின்றன. சில பருப் பொருள் சார்ந்தவையாக இருக்கின்றன. இரண்டுமே சிலருக்குத் தெளிவையும் சிலருக்குத் தெளிவற்ற தன்மையையும் அளிக்கின்றன. ஆயினும் கவிதையின் அடிப்படை அம்சங்கள் இரண்டுக்கும் பொதுவாய்த்தான் உள்ளன. இரண்டையும் அதனதன் தளத்தில் அணுகும் போது அடிப்படை அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. நல்ல கவிதை, உருவத்தைச் சார்ந்திராமல் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றது. கவிதையின் நீளத்தை, உருவத்தைக் கவிதைகளே தீர்மானிக்கின்றன. சொல்லப்பட்ட பொருளில் உறுதியுட னிருக்கின்றன. தனி அனுபவம் பொது அனுபவமாகவும் பொது அனுபவம் தனி அனுபவமாகவும் இரண்டறக் கலந்திருக்கிறது. ஆழ்ந்த ஒரு தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்துகின்றன. வாசிப்பவனிடத்தில் ஒரு நகர்வை உண்டாக்கி, ஓரளவு இடம் பொருள் ஏவல் முதலியவற்றைக் கடக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் திறம்பட அதனதன் இயக்கத்தைச் சாதிக்கிறது. ஒவ்வொரு சொல்லும் அதனதன் இடத்தில் இறுக்கமாய் அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக் கோப்புக்குள் உரையாடிக்கொள்கின்றது. எந்த ஒரு இடத்திலும் அதன் முழு வீர்யத்துடன் செயல்படுகின்றது. ஒவ்வொரு கவிதையும் தன்னுடைய இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரிந்து வைத்திருக்கின்றது. மேற்கூறியகாரணங்களால் மேலும் ஒரு நல்ல கவிதையின் வெளிப்பாட்டிற்குக் காரணம் அக்கவிதைதான். தேர்வுக்கு என்றுமே ஒரு வரையறை உண்டு. இதில் இடம் பெறாத நல்லவரிகளின் சொந்தக்காரர்கள் இதற்கெல்லாம் வருத்தப்படும் பிரக்ருதியைச் சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய நூலக வறட்சியையும் காரணமாகக் கொள்ளலாம். 1. | நீண்டதொரு காலம் போல் மீண்டுமொரு சந்திப்பு | | | | கோ. ராஜாராம் | 2. | நடவு நடும் பெண்கள் பாடும் பாட்டுகளிலே மட்டும்தான் சேறு பட்டிருக்கவில்லை.
| | | | கொனிஷ் ரெய்ஸான் (ஜப்பான்) (க. நா. சு. )
| 3. | மண் புயல் தணிந்துவிட்டது ஆனால் போர் தொடர்கிறது-இடம் பெயர்கிறது
| | | | தருமு அரூப் சிவராம் | 4. | சோளக் கொல்லைப் பொம்மையிடம் இரவில் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது.
|
| | | தா. ஓ. (ஞானக்கூத்தன்) | 5. | உன்னுடைய சாமான் சலித்துத் தொங்கும்.
| | | | ஐராவதம் | |