பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்243

சைக்காலஜிகலா அப்ரோச் பண்ணனும். அவனோட life experienceல இருந்து அது கிடைக்கறதா இல்ல lifeக்கு அப்பாற்பட்ட விஷயங்களிலிருந்து கிடைக்கற experienceல இருந்து இந்த மாதிரி ஞாபகங்கள் வருதான்னு அவனுக்கே தெரியாது. அந்த நேரத்தில் அவன் creative writerஆக இருந்தா சில விஷயங்கள் intuitiveஆக புலனாறது. அதை கவிதைல கொண்டுவரபொழுது அது complex metaphor ஆகவோ இல்ல complex imageஆகவோ இருக்கறதுக்கு possibilities இருக்கு. இதை ஒருத்தன் புரிஞ்சுக்கணும்னா அது அந்தக் கவிஞனுக்கே immediate ஆக சாத்தியம் இல்லை. So வாசகன் அந்த இடத்துல கொஞ்சம் தேட வேண்டியிருக்கு. ஆனா அதுக்கு ஏதாவது ஒரு நாள் ஒரு சைக்காலஜிஸ்டோ இல்ல brain chemist டோ ஒரு விளக்கம் தர முடியும். ஆனா அதுகூட ஒரு definite answer என்று கூற முடியாது. இவன், இவனோட அர்த்தம்தான் முழுமையான அர்த்தமாக இருக்க முடியும். அது கிடைக்கிற வரைக்கும் அந்தக் கவிதையை அவன் வாசிச்சிட்டே இருப்பான். அவ்வளவுதான்.

பிர: இப்படிச் சொல்லலாமா? அதாவது ஒரு கவிஞன் தனக்கான ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கொண்டு வருவதன் மூலம் பல மனிதர்களுக்கான, பல தனிநபர்களுக்கான தீர்வைக் கொண்டு வரான் அப்ப டின்னு F. R. லீவிஸ், T. S. எலியட்டின் கவிதைகளைப் பற்றிச் சொல்லுவார். அந்த மாதிரி இந்த இருண்மை அல்லது புரியாத தன்மை, conscious, sub-conscious இன்னும் pre-conscious statesல இருக்கிற சில மன நிலைகளை ஒரு கவிஞன் சொல்லறப்போ, அதை முதல்முறை படிக்கற வாசகனுக்குச் சிரமம் ஏற்படலாம். ஆனா அதே கவிதையை அனுபவம் ஏற்பட்ட பிறகு பத்து வருஷம் கழிச்சுப் படிக்கறான்னு வச்சுக்குவோம், அப்ப அந்த கவிதை புரியலாமில்லையா? இந்தக் காரணத்துக்காக அது புரியறதோ புரியலையோ, உபயோகமோ இல்லையோ அதை அந்தக் கவிதையை வாழ்வுக்கு கொண்டுவரது, to bring it into existence அவசியம்தான்னு எனக்குப் படறது.

ஆத்: கண்டிப்பா நாம் காத்திருக்கணும்தான்.

பிர: எதுக்கு? கவிதை புரியறதுக்கா?

ஆத்: ஆமா, புரியதுக்காகக் காத்திருக்கணும். ஆனா அதுக்காகப் புரியாத கவிதைகள்தான் கவிதைகள்னு நான் ஒத்துக்கமாட்டேன்.

பிர: சரி.

ஆத்: இன்னும் எனக்கு, நான் இருக்கக்கூடிய சமூகத்துல எந்த அளவுக்கு நான் முரண்பட்டிருக்கேன் அல்லது ஒத்துப்போறேன்னு விஷயங்கள் வரும்போது அதுக்கு நான் நேர்மையா இருக்கேன்னா அதை நான் கவிதைல கொண்டுவந்திருக்கணும். அதைச் செய்யாம நான், வெறும் எனக்குள்ள இருக்கற பிரச்சினைகளை மட்டுமே வச்சி ருக்கேன்; அது வந்து பத்து வருஷமோ இல்ல 20 வருஷமோ கழிச்சுப் புரியும்னு, இல்ல வேற யாராவது சைக்காலஜிஸ்டோ, சைக்கியாட்ரிஸ்டோ வந்து அதை interpret பண்ணுவான் அப்படின்னு நான் காத்