கன் எங்கேயோ இருக்கான். ஐநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கான். அவன் இந்தக் கவிதையைப் படிக்கிறான். அவனுக்கு அந்தக் கவிதை புரியுணும்னு சொல்லும்போது வேறு யாரோ ஒருவர் அந்தக் கவிதைக்கு விளக்கம் சொல்லறப்ப ஓரளவுக்கு உள்ள போறதுக்கு வாய்ப்பு கிடைக்குது. அந்த வகையில அந்தமாதிரி விளக்கங்கள் தேவை. ஏன்னு கேட்டா, கவிதைகள்ல இன்னைக்கும் நாம ஒரு புறப் படற நிலையிலேதான் இருக்கோம். நாம எந்த நிலையிலும் போய்ச் சேர்ந்திடலை. பிர: எழுதப்பட்ட மொழி ஒரு குறியீடுன்னு நாம சொல்றோம். அதை ஒரு அடிப்படையாவெச்சு ஆரம்பிச்சா கவிதையும் எழுதப்பட்ட சொற்களால்தான் ஆகியிருக்கு. அப்ப கவிதைபுரிவதற்கான சாத் தியப்பாடுகள் என்னென்ன? ஆத்: அகநோக்குப் பார்வைகள் கொண்ட கவிதைகள் சிலதுல மொழி வெறும் குறியீடா மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா ஆனந்தோட கவிதைல பறவை. அவரோட பல கவிதைகள்ல பறவை வருது. தொடர்ச்சியா வருது. So பறவைங்கறது ஒரு விஷயத்தைக்குறிப்பிடறது. அதாவது பறக்கறது. சுதந்திரமா பறக்கறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாம பறக்கறது. அப்படிங்கிறதை அது குறிப்பிடறது. அந்த வகையில ஆனந்தோட கவிதைல பறவைங்கறது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஒரு முழு சுதந்திரத்தோட எங்கே வேணும்னாலும் திரியக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்கறது. அதனால மொழிப்பயிற்சி ஓரளவுக்கு இருக்கிறவாசகர்கள் குறியீட்டோட நியாயத்தையும் அர்த்தத் தையும் புரிஞ்சுக்க முடியும். பிர: ஆனா கவிதை எல்லோருக்கும் புரியல. புரியாத கவிதை எழுதறது ரொம்பத் தப்புங்கறமாதிரி சொல்றாங்களே அது பத்தி என்ன சொல்றீங்க? அப்ப எதுக்காக எழுதறீங்கனுகேக்கறாங்க. அதாவது உங்களுக்கே புரியாத அல்லது வாசகனுக்குப் புரியாத கவிதை எழுதறதுலஎன்ன பிரயோஜனம்னு கேக்கறாங்க. இது validஆன காரணமாக இருக்க முடியுமா? வாசகர் பக்கத்துல இருந்து. ஆத்: ஒரு individualங்கறவனுக்கு நேரடியா ஒரு consciousல சில அனுபவங்கள் பதிவாயிருக்கு. சில அனுபவங்கள் sub-consciousல பதிவு ஆகியிருக்கு. இன்னும் சில அனுபவங்கள் அவனுக்கே புரியாம, தெரியாம அவனுடைய brain cellsல போய் record ஆயிருது. இப்ப அவனுக்குக் கனவுகள் வருது. அந்தக் கனவுகள்ல ஒரு ஊஞ்சல் வரது. அவன் சைக்கிள் ஓட்டிண்டு போறான். இல்ல groundல இருக்கானோ, இல்ல யாருமில்லாத கடற்கரையில்தனியா இருக்கானோ, இந்த மாதிரி பல்வேறு காட்சிகளில் அவனே இருக்கான். பிர: யார்? அவன்... அந்தக் கவிஞனா? ஆத்: இல்லை ஒரு individual. அவனுக்கு ஒண்ணுமே புரியல. அதை அவன் probe பண்ணிட்டு போகும்போது ஒண்ணு அவன் அதை |