அதனால ஒவ்வொரு காலகட்டத்திலேயும் அந்நியமாதல்ங்கற அந்தவிஷயம் உணர்ந்தோ உணராமலோ நடந்திருக்கு. அவன் எழுத் தாளனாயிருந்தா எழுத்திலேகொண்டுவரான். ஓவியனா இருந்தா அதை ஓவியத்துல கொண்டுவரான். அதனால் இந்த அந்நியமாதல்ங்கறதநாம பல ஆயிரம் வருஷங்களாகவே ஒரு விதத்துல உணர்ந்து வரோம். இந்திய சிற்பங்களில் இருக்கக்கூடிய சில புரியாத் தன்மைகள் - யாளி மாதிரி - இல்லாத மிருகங்கள் ... பிர: புரியாத மிருகங்கள... ஆத்: ஆமாம். புரியாத மிருகங்களைக் கொண்டுவரும்போது அந்த இடத்தில் அவன் அவனுடைய கற்பனையில் அந்நியமானதால்தான் அந்தமாதிரி கொண்டுவர முடிஞ்சிருக்கு. ஆனா இன்றைக்கு ஓருவன் அந்நியமாகிப் போறான்னா அதை அவன் முழுக்க முழுக்க உணர்றான். பிர: இல்ல... நான் கேக்கற கேள்வி ... ஆத்: நீங்க கேக்கற கேள்வி பாதிப்புகள், ஓவியம் மற்றும் சைக்காலஜி போன்ற அறிவுத்துறைகள்லயிருந்து வந்த விஷயமான்னு ... பிர: இல்ல... கவிதைங்கற துறையில ஒரு perceptive poet வேறுசில துறைகளை அனுமதிக்கிறான். தன் சிந்தனைக்குள்ள அப்படி அவன் அனுமதிக்கறதால கவிதைகள் சிக்கலாகறதான்னு கேக்றேன். ஆத்: இல்லை... அதில தெளிவுதான் வர முடியுமே தவிர... பிர: தெளிவு கவிஞனுக்கு வர முடியும். இந்தத் துறைகள் பற்றித் தெரியாத ஒருவாசகனுக்குத் தெளிவின்மை வரக் காரணமாக இருக்க லாம் இல்லையா? ஆத்: இருக்கலாம். பிர: வேறு ஏதாவது விளக்கம் தர முடியுமா? இதைத்தவிர inter- pretationsன் அவசியத்தைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா? ஆத்: சில கவிதைகள் புரியாமயே போகிறபோது அதைப் புரிஞ்சிருக்கிற ஒருத்தர் வந்து விளக்க முற்படறார். அதாவது ஒருத்தருடைய சுய அனுபவமானது இன்னொருத்தருக்கு முழுக்க முழுக்கவோ இல்லை ஓரளவுக்கோ அந்த அனுபவத்தின் கிட்ட நெருங்கற மாதிரி இருக்கும்போது அந்தக் கவிதையை அவர் புரிஞ்சுக்கறார்னு சொல்ல முடியும். அதனால இது புரியாத சில வாசகர்களுக்கு விளக்க முற்படறார். இதன் மூலமா poetsக்கு quantity wise ஒரு contribution இருக்கு. உங்க கவிதைகளைப் புரியலைன்னு first readingல சொல் லிடறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. ஆனா அதுக்குத்தான் முன்னாலேயே 2அல்லது 3 தடவை படிக்கணும்னு சொல்லியிருக்கு. அப்பறம் உங்க interpretation பிரகாரமா ஒரு வாசகன் ஒரு கவிஞனின் அனுபவத்துக்கு இணையா தன்னை உயர்த்திக்கணும்கற ஒரு எதிர்பார்ப்பு வந்து அந்த இடத்துல இருக்கு. ஆனா நேரிடையா ஒரு வாச |