பக்கம் எண் :

240ஆத்மாநாம் படைப்புகள்

poetryகூட புரியாம போயிடறதுக்கு chance இருக்குன்னு அர்த்தம்தானே. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்றீங்களா...

ஆத்: Plain poetryன்னு சொல்லும்போது ஆனந்தோட பல கவிதைகள் plain poetry ஆகதான் வருது...

பிர: உதாரணத்துக்கு எதையாவது சொல்ல முடியுமா... ?

ஆத்: ‘ம்... அதோ அந்தச் சிறுபறவை அழைத்துவரும் மேகம் தண் என எனை நிறைக்கையில், நான் இல்லாது போவேன்’- இந்தக் கவிதையில் அந்தப் பறவை, அப்றம் ‘நான் இல்லாது போவேன்’ அப்படின்ற expression எல்லாமே தெளிவாக இருக்கு.

பிர: அதாவது statement plain ஆக இருக்கு.

ஆத்: ஆமாம். ஆனா முழுக்கவிதையும் படிச்சா உங்களுக்கு அதில் புரியாத ஏதோஒரு அம்சம் இருக்குன்னு, அதில் அவர் உணர்ந்த ஏதோ அனுபவம் உங்களுக்குச் சரியா transfer ஆகலை அப்படிங்கற மாதிரி quality அந்த poemல இருக்கு. அதனால் Simple poemகூட complexஆக இருக்க வாய்ப்புகள் இருக்கு.

பிர: அதையேதான் நானும் கேக்கறேன்.

ஆத்: இன்னொரு நேரத்திலே ஒரு complex poem, ஒரு absurd poem ஒண்ணை நாம assess பண்ணி பாக்கறப்ப புரியக்கூடியதா இருக்கு. இதுக்கு உதாரணம் என்னோட கவிதைகள்லேர்ந்தே எடுத்துக்காலம்.

பிர: எந்தக் கவிதைய எடுத்துக்கலாம்?

ஆத்: என் ‘மறுபரிசீலனை’ கவிதையையே எடுத்துக்கலாம். அது நேரிடையா obscure poem கிடையாது; absurd poem ஆகச் சொல்லலாம். கொலாஜ் மாதிரி various cuttingsஐ வச்சு ஒரு paintingஐ paste செய்யற மாதிரி.

பிர: இப்படிச் சொல்லலாமா? absurdஆக இருக்கறது ரொம்ப logical ஆகப் பாக்கறவனுக்கு obscure ஆகத் தெரியலாமில்லையா?

ஆத்: That is possible.

பிர: ஏன்னா எல்லாம் ஒரு ஒழுங்கிலேயே இருக்கணும்னு எதிர் பார்க்கிறவனுக்கும் absurdஆக இருப்பது ஒரு ஒழுங்கில்லாததாய்த் தோன்றலாம். அதனால இன்றைய சூழல்ல விளக்கம் தர்றது அதாவது interpretations தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதற்குக் காரணம் பகையான ஒரு சமூகத்தில் கவிஞன் அந்நியமாகிப் போனதாலா? அல்லது கவிதைங்கற ஒரு அறிவுத்துறையிலே, மற்ற அறிவுத் துறைகளின் பாதிப்புகள், உதாரணத்திற்கு சைக்காலஜி, பெயிண்டிங், இசை மற்றும் ஆஸ்ட்ரோஃபிஸிக்ஸ், டைம் இந்தமாதிரி விஷயங்கள் கலந்துவிட்டது காரணமா?

ஆத்: இதில அந்நியமாகிப் போறதுங்கறது அம்சம் பல நூற்றாண்டுகளாகவே மனிதன் ஒரு சமூகத்திலிருந்து அந்நியமாகிப்போய் வரான்.