பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்239

இருக்கும்போது it is indirectly influenced by his sociallife. அதனால் வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறதால்தான் கவிதை complex ஆகிறதா?ஏன்னா, மேற்கத்திய அரூப ஓவியங்களைப் பத்திச் சொல்லும்பொழுது வாழ்க்கை அரூபமாகிவிட்டதால்தான் ஓவியங்களும் அரூபமாயிருச்சுங்கறாங்க.

ஆத்: கவிதைகள், ஓவியங்கள் அரூமாயிருப்பது காலத்தோட நிர்ப்பந்தம்.

பிர: விளக்கமா சொல்லுங்க.

ஆத்: ஒரு நேரிடையான புகைப்படத்துடன் ஓவியத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஓவியம் குழப்பமாகத் தெரிகிறது. ஆனால் ஓவியம் வரைபவன் தன் முழு தீட்சண்யத்தையும் அதில் கொண்டுவருவதற்காக அப்படி வரைகிறான். ஆனால் கவிதை புரியாததா வருதுன்னு சொல்லும்போது அந்த obscurity ஒரு சில சமயம் forced obscurity ஆக இருக்க முடியும். சில விஷயங்களை நேரடியாக எழுத்தின் மூலம் சொல்ல முடியாது. எனவே வேறுவிதமான வார்த்தைகள் மூலமாய் அதைத் தெரிவிக்கிற முயற்சிகளாக இருக்க முடியும். உதாரணமாக ‘மறு பரிசீலனை’ என்ற கவிதையில் கடைசி வரி.

பிர: மறு பரிசீலனை உங்க கவிதை இல்லையா?

ஆத்: ஆமாம். அதில ‘புறப்பட்டாகிவிட்டது கறுப்புப் படை’, அதுக்கு முன்னாடி ‘தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள் என’, அப்பறம் ‘துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள் போல’ இப்படிப் பல விஷயங்களை indirect ஆகச் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் obscurity வருது.

பிர: அதைத் தவிர்க்க முடியாதுன்னு சொல்றீங்க.

ஆத்: அது ஒரு காலத்தின் நிர்ப்பந்தம்னு ...

பிர: அதாவது வெளிப்பாட்டில் தவிர்க்க முடியாததா அல்லது கருப்பொருளிலேயே தவிர்க்க முடியாததா?

ஆத்: அது situationsனால தவிர்க்க முடியாததாகுது.

பிர: Situationsனா? இன்னும் தெளிவா சொல்லணும் நீங்க.

ஆத்: Situationsனு சொல்லும்போது ...

பிர: ஒரு காலகட்டம்னு சொல்லலாமா அதை?

ஆத்: ஒரு காலகட்டத்தின், சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணிகளைப் பொறுத்து அது அமையறது.

பிர: சில கவிதைங்க ரொம்ப plain ஆகவே இருக்கு. சிக்கலான வார்த்தைங்க ஏதும் போடறதில்லை. ஆனா படிச்சு முடிச்ச உடனே comprehensiveஆக ஓரு ஒட்டுமொத்தமான பார்வைக்குப் புரியாம போயிடறது. இதை plain poetryன்னு நாம எடுத்துக்கிட்டோம்னா plain