பக்கம் எண் :

238ஆத்மாநாம் படைப்புகள்

தத்துவத்தையோ தூக்கலாக அறிவிக்கும்படியாக இருந்தன. அதற்கப்பறம்வந்த ‘கசடதபற’ கவிதைகளில் பௌதிக உலகத்தின் தாக்குதல் மற்றும் அனுபவம் வெளிப்படையா தெரியவந்தது. சமீபத்திய ‘ழ’ கவிதைகள் சுய அனுபவம், சுய சிந்தனையின் அடிப்படைல இருந்தன.

பிர: எழுபதுகளில் இருந்த புதுக்கவிதைகளுக்கும், தற்போதைய புதுக்கவிதைகளுக்கும் என்ன வித்தியாசம்? முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா?

ஆத்: 70களில் இருந்த புதுக்கவிதைகள் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டவை. தற்போது கொஞ்சம் நிதானமாக யோசித்து எழுதப்படுகின்றன. 70ன் கவிதைகள் இன்றைய பிரபல வாரப் பத்திரிகைகளில் வெளிவரும் கவிதைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துவிட்டது ஒரு சோகமான விஷயம்.

பிர: நடை இதழில் சி. மணி, ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது 1969-70ல். இன்றைக்கும் இந்த நிலை மாறிவிடவில்லை. இதுபற்றி?

ஆத்: இதைப்பற்றிச் சொல்லும்பொழுது - இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் கவிதைகளில் இருப்பதால் - ஒருவிதப் போக்கின் கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுகின்றன, இன்னொரு வகை மீண்டும் ஓரிரு முறை படித்தவுடன் ஓரளவோ அல்லது முழுமையாகவோ புரிகின்றன. ஆனால் புரிதல் என்பது தனிப்பட்ட நபரின் விஷயமாகும். எனவே கவிதைகள் புரிகின்றன, புரியவில்லை என்பது தன்னிலை விளக்கமாகத்தான் அமைகின்றது.

பிர: ஒரு நல்ல கவிதைக்கும் அதிலிருக்கும் obscurity, அதாவது புரியாத தன்மைக்கும் சம்பந்தமிருக்கா?

ஆத்: இது கவிதையின் கருப்பொருளைப் பொறுத்த விஷயம். ஒருவரின் அனுபவம் சிக்கலானதாக இருந்தால் கவிதைகள் இருண்மையுடன் கூடியதாக இருக்கும். சிலசமயம் கவிதைகள் தெளிவாகவே வெளியாகவும் கூடும். எனவே கவிதைக்கும் obscurityக்கும் நேரடித்தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. சில கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுவதால் அது வார்த்தைக்கு மீறிய பொருளைக் கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது. அதே சமயம் ஒரு கவிதை புரியவில்லை என்னும் பொழுதும் அந்தக் கவிதைவில் குற்றமுள்ளதுஅல்லது வாசகனிடம் குற்றமுள்ளது என்றும் சொல்லமுடியாது. சிறிது காலம் தாழ்த்தித்தான் எதுவும் சொல்ல முடியும்.

பிர: ஒரு கவிதை சிக்கலா இருக்கறதுக்கு வாழ்க்கைல இருக்கற complexity காரணமா, இல்லை அதை எழுதின கவிஞன் ரொம்ப complex ஆன அனுபவமுடையவனா இருக்கான்கிறது காரணமா, அல்லது அவனது சிந்தனை, வெளிப்பாட்டு முறையே complex ஆக இருப்பது காரணமா? சிந்தனை வெளிப்பாட்டு முறையே complex ஆக