லைன்னு சொல்லிட்டார். சில சமயம் interpretations கவிதைகளையே enhance பண்ற அளவுக்கு வந்துடுது. ஆத்: ஆமாம். பிர: Committed poetryன்னு சொல்றாங்க இல்லையா? அதை ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகள்னு மொழிபெயர்க்கலாம். அந்தமாதிரி தமிழ்ல ஏதும் எழுதப்பட்டிருக்கா?இது முதல் கேள்வி. ஒரு துணைக் கேள்வி: மேற்கத்திய நாடுகள்ல இந்தமாதிரி எழுதப்பட்டிருக்கா? அவைகளின் தரம் எப்படி? நீங்க நிறைய மேற்கத்திய கவிதைகளைப் படிச்சிருப்பீங்கங்கிற நம்பிக்கையில் இதைக் கேக்கறேன். ஆத்: Committed poetryன்னு சொல்றப்ப முழுக்க முழுக்க ஒரு கவிஞன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் ஒழிய கவிதைகள் சாத்தியமே கிடையாது. அதுக்குமேல நாம் committed poetryன்னு சொல்றப்ப, ஒரு social commitmentஐ refer பண்ற மாதிரி ஆயிடறது. பிர: Social commitmentனா சமுதாயத்துக்கு உண்மையா இருக்கறது... ஆத்: சமூகத்துல ஈடுபாடோட நேர்மையா இருக்கறதுன்னு சொல்லலாம். சமூகத்துல ஈடுபாடு கொண்ட கவிதைகள் ஒரு புறம். இன்னொருபுறம் தன்னைப் பற்றித் தேடலுடன் கூடிய கவிதைகள். இரண்டுமே committedதான். ஆனா ஒரு கவிஞன் தன்னைப் பற்றி மட்டுமே தேடிக்கொண்டிருந்து தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றி எதுவும் கூறாமல் இருந்தால், அந்தமாதிரிக் கவிஞர்கள் காலப்போக்கில் தள்ளப்பட்டுவிடுவார்கள். ஆக, ஒரு கவிஞனை முழுமையான கவிஞன்னு சொல்லணும்னா அவனுக்கு social ஆகவும் ஒரு commitment இருக்கணும் personal ஆகவும் ஒரு commitment இருக்கணும். ஒரு angleல மட்டும், வெறும் social commitment அல்லது Personal commitment மட்டும் இருந்தா முழுக்கவிஞன்னு சொல்லிட முடியாது. பிர: முழுமையடையாத கவிஞன்னு சொல்லிடலாமா... ஆத்: முழுமையடையாத கவிஞன்னு சொல்ல முடியாது. அது implied. இரண்டும் ஒண்ணுதான். பிர: சரி, இன்னொரு கேள்வி உள்முகத்தேடல்னு சில கவிஞர்களின் கவிதைகளைச் சொன்னீங்க இல்லையா... ஆத்: இல்ல, அகநோக்குப் பார்வைன்னு... பிர: சரி, அகநோக்குப் பார்வை அல்லது உள்முகத்தேடல் அல்லது introvert outlook அல்லது inlookனு சொல்லலாம். நீங்க வேறகவிதைகள் இருக்குன்னு சொன்னீங்களே, அதாவது objective ஆக அல்லது புற நோக்கிலே எழுதப்பட்ட கவிதைகளும் இருக்குங்கறீங்க. ஆனா இப்ப நீங்க குறிப்பிட்ட கவிஞர்கள் நிறைய பேர் இந்த அகவயக் கவிதைகள் நிறைய எழுதக் காரணம் அது ஒரு typical ஆன |