பக்கம் எண் :

246ஆத்மாநாம் படைப்புகள்

Indiannessன் பாதிப்போன்னு சந்தேகமா இருக்கு. இதைப் பத்திகொஞ்சம் தெளிவு பண்ண முடியுமா?

ஆத்: பொதுவா கவிதையை seriousஆக எடுத்திட்டிருக்கிற கவிஞர்கள் மிகக்குறைவா இருக்கற இந்த நேரத்துல, சில கவிஞர்கள்தான் committedஆக இருக்காங்க. அவங்க அகநோக்குப் பார்வை கொண்ட கவிஞர்கள் ஆனாலும் சரி, புறவயப்பட்ட பார்வை இருக்கற கவிஞர்கள் ஆனாலும் சரி, மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்காங்க. அவங்க கவிதைகள்ல புறவயமான பாதிப்புகள் இருக்கக்கூடிய கவிதைகள் அதிகமாக இல்லன்னு சொல்றது ஒரு பொதுவான முறைல சொல்லக்கூடிய குற்றச்சாட்டாகத்தான் எடுத்துக்க முடியும். புறவயமான கவிதைகளை எழுதச் சொல்லி எதுவும் force பண்ண முடியாது. எந்த state ஆலயும் force பண்ண முடியாது.

பிர: Stateன்னா அமைப்புன்னு சொல்லலாமா...

ஆத்: ம. எந்த அமைப்பாலயும் force பண்ண முடியாது. அதனால தான்ஜோசப் ப்ராட்ஸ்கி போன்ற கவிஞர்கள் தங்கள் தேசத்தை விட்டு வேற தேசத்துக்குப் போய் கவிதைகள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உருவாறது. Commitmentங்கறது அவங்ககவிதைக்கு அவங்க committedஆக இருக்காங்களா இல்லையான்னுதான் பார்க்க முடியுமேதவிர மற்றபடி social commitmentஓட எழுதறாங்களா இல்லையான்னு பாக்க முடியாது. அவங்களே மனிதாபிமான அடிப்படைல எழுதினாங்கனா அதை நாம வரவேற்கலாம், அவ்வளவுதான். Force பண்ண முடியாது.

பிர: சமூகத்துல ஈடுபடுத்திக்கிட்ட எழுத்துக்கள்... அதனோட வெளிப்பாட்டு முறைக்கும், romanticஆன வெளிப்பாட்டு முறைக்கும் தொடர்பிருக்கா? அப்படி வந்து ஈடுபடுத்திக்கொண்ட எழுத்துக்கள் எல்லாம் romanticஆகதான் வெளிப்பட முடியுமா? குறிப்பா நீங்க வானம் பாடிக் கவிஞர்கள் பற்றி ஒரு சின்ன குறிப்பு கொடுத்தா தேவலாம்னு தோணுது.

ஆத்: பொதுவா சமூகத்திலே ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகளுக்கும், romanticஆன கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்னிக்கு romanticஆக எழுதப்படக்கூடிய புரட்சிகரமான கவிதைகள் சினிமாப் பாடல்லகூட இருக்கு. ஆன அதையெல்லாம்நாம கவிதைகளா எடுத்துக்கறது கிடையாது. Romanticஆன வெளிப்பாடு சில குறிப்பிட்ட கவிதைகளுக்குதான் பொருத்தமானதா இருக்க முடியும். சமூக ஈடுபாடுங்கறபோது அந்த இடத்துலஅது romanticஆக வந்தா அது ரொம்ப ஆபாசமாதான் இருக்க முடியும். இந்த வகைல நாம வானம்பாடிக் கவிதைகளைப் பார்க்கும்போது, பொதுவா அவங்க சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் எழுதுறாங்க. ஆனா சமூகப் பிரச்சினைகள் எந்த அளவுக்கு ஆழ்ந்த உணர்ந்து எழுதியிருக்காங் கன்னு தெரியல. அவங்க usage of language ரொம்பவும் romanticஆக இருக்கறதால அந்தக் கவிதைகள் நீர்த்துப்போயிடறது. அவை எழுதப்