படுவதின் முக்கியமான purposeஐயோ அவை serve பண்ணுவதில்லை. ஆனா அதில சில exceptionsம் இருக்கும். பிர: தமிழ்ச் சூழல்ல ... ஏன் இந்தியச் சூழல்லயே நெரூடாவோட statureக்கோ, லோர்காவோட integrityக்கோ அல்லது ஸ்டீவன் ஸ்பென்டரோட் integrityக்கோ ஒரு கவிஞனை நம்மால பார்க்க முடியலை. Outputலயும் சரி, கவிதையை சாதிச்ச முறையிலேயும் சரி, அவங்க நடத்திய வாழ்க்கை முறையிலும் சரி, அவங்கமாதிரி இங்கு ஒருத்தரையும் நாம பார்க்க முடியலை. ஏதாவது காரணம் இருக்க முடியுமா? ஆத்: அங்க பல மாற்றங்கள் உருவாகுது. பிர: எதில... ? ஆத்: அவங்க systemல் பிர: System of what? ஆத்: அவங்க வாழ்க்கை முறைல, அதில பல விதமான மாற்றங்கள் அடிக்கடி உருவாறதால அவங்க உடனடியா வெளிப்படுத்திக்கறாங்க. அந்த மாற்றங்களுக்கு அவங்க react பண்றாங்க. ஆனா இந்தியால எவ்வளவோ விதமான மாற்றங்கள் வந்திட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய நாடா இருந்து இவ்வளவு மொழிகள் இருக்கும் போது, நீங்க சொல்ற statureஉடன் ஒரு poet உருவாற அளவுக்குப் பாதிப்புகள் இல்ல. National levelல்ல ரவீந்திரநாத் தாகூர் ஒருத்தர் பேசப்பட்டிருக்கார். ஆனா பாரதியாரையோ இல்ல ஆந்திராவில, கர்நாடகாவில, இல்ல மஹாராஷ்ட்ராவில் இருக்கிற கவிஞர்களையோ அந்த levelல்ல பேசப்பட்டதாசொல்ல முடியல, அதை posterityதான் சொல்லணும். நாம ஒண்ணும் சொல்ல முடியாது. பிர: அதாவது பின்னால வரவங்கதான் சொல்லணும்... ஆத்: ஆமாம். பிர: Mathew Arnoldங்கற ஆங்கிலக் கவிஞர் - விமர்சகர் தன்னுடைய Preface to the Study of poetryங்கற சின்ன கட்டுரையோட முன்னுரையில (1853ல் வெளியானது) தன் காலத்துக்குச் சற்று பின்னால மதத்தோட இடத்தைக் கவிதை நிரப்பிடும்னு சொன்னார். இது டார்வினோட Origin of Species வெளியானதோட காரணமா இருக்கலாம். அந்தச் சமயத்துல கொஞ்சம் மதம் ஆட்டம் கண்டுபோனதால இதைச் சொல்லியிருக்கலாம். அதுக்கும் இன்றைய தமிழ்க் கவிதைக்கும் அல்லது பொதுவா உலகக் கவிதைக்கும் ஏதாவது relevance இருக்குமா? ஆத்: கண்டிப்பா இருக்கு. முக்கியமா நம்ம நாட்டிலேயே இருக்கு. ஏன்னா நம்ம cultureல் வந்து dogmatic ideas, religious beliefs இதெல்லாம் ஒரு விதமான அர்த்தத்தையும் வாழ்க்கைக்குக் கொடுக்கறது கிடையாது. அந்த மாதிரி நேரத்துல ... |