பிர: அதாவது வெறும் சடங்காகிப்போன மதத்தைப் பத்திச் சொல்றீங்க இல்லையா? நம்ம இந்து மதம் வாழ்தலே மதமாகியிருக்கிற ஒரு மதம். பின்னால ஏற்பட்டசில விளைவுகளினால அது வெறும் சடங்காகிப் போச்சுன்னு தாகூரே தன்னுடைய பல கட்டுரைகள்ல சொல்லியிருக்கார். அந்த மாதிரிச் சடங்காகிப்போன ஒரு மதத்தை replace பண்ற capacity, ஒரு தகைமை கவிதைக்கு இருக்குன்னு நீங்க நம்பறீங்களா? ஆத்: அது இப்ப இல்லன்னாலும்கூட இன்னும் literacy rate increase ஆகும்போதும், அப்பறம் literatureல interest improve ஆகும் போதும் அதுலயும் குறிப்பாகக் கவிதைகள்ல interest அதிகரிக்கும் போதுதான் அதைச் சொல்ல முடியும். இப்போ immediateஆக poetry religionஐ replace பண்ணிடும்னு சொல்ல முடியாது. கண்டிப்பா replace பண்ணும், இந்த qualifications வரும்போது, கவிதை தன்னுடைய முழுப் பரிமாணத்தோட மக்களை ஈர்க்கும்போது அந்த effect வர முடியும். பிர: நாம இப்ப புதுக்கவிதை பத்தியே பேசி முடிக்காம இருக்கோம். ஆனா மேற்கில 1940களிலேயே இந்தப் புதுக்கவிதைகளையெல்லாம் தாண்டி அதாவது Verse-libre/Free-Verse என்கிறதையெல்லாம் தாண்டி anti-poetryங்கற விஷயம் வந்துருச்சு. அந்த மாதிரியான ஒரு வளர்ச்சி நிலை தமிழுக்கு இருக்கா? இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க? ஆத்: எதிர்க்கவிதைங்கறதைப் பத்தி இன்னும் எந்த விதமான தெளிவான அபிப்ராயமும் form ஆகல. ஆனா இப்போ கவிதைகள் போற போக்கைப் பார்த்தா வேறவிதமான கவிதைகள் உருவாகும்னு சொல்ல முடியாது; இந்த எதிர்க்கவிதைகள் அப்படிங்கறஒரு வடிவத்துக்குள்ள தான் வர முடியும்னு தோணறது. பிர: இன்னிக்கு எப்படி நவீன ஓவியத்தைப் பயன்படுத்தறவங்க அல்லது பயில்றவங்கன்னு சொல்லலாம் - அவங்க பல பேருக்கு மரபு வழியான ஓவியத்தைப் பத்தினபயிற்சி இல்லாம இருக்காங்க அல்லது புறக்கணிக்கறாங்க. அதே மாதிரி இன்னிக்குத் தமிழ்ல பேரிலக்கியங்கள் பற்றி அறிவு இல்லாமலே நிறைய பேர் கவிதைகள் எழுதிட்டிருக்காங்க. இவங்களோட கவிதைகள்லாம் எப்படி இருக்கும்? அதை identify பண்ண முடியுமா?் ஆத்: மரபை அறிஞ்சு அதை மீறது ஒண்ணு. அந்த மாதிரிதான் இப்பநிறைய பேர் செய்யறாங்க. மிகச் சிலரே மரபு தெரியாம புதுசா அவங்க கவிதைகள்னு feel பண்ணறதை எழுதறாங்க. அவங்க கவிதைக்கும் இவங்க கவிதைக்கும் content levelல்ல variation இருக்கறதுக்கு possibilities கிடையாது. மரபை மீறறவனும் அவனுக்கு ஒரு clarityக்காகத்தான் அதைச் செய்யறான். ஆனா மரபைத் தெரியாதவன் மரபை மீறின கவிதைகள் இருக்கு இல்லையா? அதைப் படிக்கும்போது அவன் feel பண்ணக்கூடிய விஷயங்களைப் பொறுத்து அவன் கவிதைகள் எழுதறான் இரண்டு பேருமே ஒரே விஷயத்தைப் பத்திதான் |