பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்249

கவிதைகள் எழுதிண்டு வருவாங்க. அதுல வித்யாசம் இருக்கறதுக்கு வாய்ப்பு கிடையாது. மரபு தெரிஞ்சாதான் கவிதை எழுதலாம்கற qualification செல்லுபடி ஆகாது.

பிர: ஒரு கலாச்சாரப் பாரம்பர்யம் வேண்டாம்னு சொல்றீங்களா? T. S. எலியட் கவிஞர்கள் ஓரளவுக்காவது படிச்சிருக்கணும்னு நினைக்கறார். எழுதியிருக்கார். அதாவது அவங்களுடைய creativityக்கு அல்லது spontaneityக்குக் குந்தகம் விளைவிக்காத அளவுக்கு அவர்கள் பொது விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுருக்கனும்னு, awareஆக இருக்கனும்னு சொல்றார்.

ஆத்: மரபு பள்ளிக்கூடங்கள்ல இருந்தே ஆரம்பம் ஆறது. தமிழ்ல எழுதக்கூடிய ஒரு கவிஞனோ அல்லது எழுத்தாளனோ மரபு ஓரளவுக்குத் தெரிஞ்சுதான் எழுதறான். அந்த வகைல மரபு முழுக்க முழுக்கத் தெரியாதுன்னு சொல்ல முடியாது. ரொம்பவும் மரபு பற்றித்தெரியும்னு confidentஆக சொல்றவங்களோட complete பண்ண முடியாமே இருக்கலாம். ஆனா அவங்களுக்கும் ஓரளவு மரபு தெரிஞ்சுதான் அவங்க புது விஷயங்களை எழுதறாங்க.

பிர: இந்த மாதிரியான ஆழ்ந்த கலாச்சாரப் பாரம்பரியம் எந்தெந்த கவிஞர்கள்கிட்ட இருந்து வெளிப்பட்டிருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

ஆத்: ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, நகுலன், சிவராமு அப்படின்னு சொல்லலாம்.

பிர: சரி, Major poets அப்படிங்கற கேள்வியை கவிதை வளர்ந்திட்டிருக்கற அந்த கால கட்டத்துல எழுப்பறது தகுதியா இருக்குமா?

ஆத்: என்னைப் பொறுத்தவரைக்கும் இப்ப எழுதற அத்தனை பேருமே Minor Poetsதான்னு தோண்றது. காவியங்களோ, மிக நீண்ட கவிதைகளோ ரொம்ப உள்ளாழ்ந்த கருத்துக்கள் இருக்கக்கூடிய கவிதைகளோ எழுதக்கூடியவங்களைத்தான் Major Poetனு சொல்லலாம். இப்பொ எழுதக்கூடிய கவிஞர்கள் முக்கால்வாசி பேர் spontaneousஆக எழுதறாங்க, இல்லை technicalஆக அவங்களுக்கு இருக்கற knowledgeஐ வெச்சு எழுதறாங்க, மற்றபடி major poetsங்கற categoryல கம்பன் மாதிரியோ, இளங்கோவடிகள் மாதிரியோ, திருவள்ளுவர் மாதிரியோ, பாரதி மாதிரியோ இப்ப இருக்கற கவிஞர்கள் யாரையுமே சொல்ல முடியாது.

பிர: அப்ப நீண்ட காவியங்கள் எழுதினாத்தான் ஒருவன் major poetஆக இருக்க முடியுமா?

ஆத்: ஒரு கவிஞனோட மொத்தப் படைப்பையுமேகூட ஒரு நீண்ட காவியமா எடுத்துக்கலாம். ஒரு தொகுப்பை நீங்க நீண்ட காவியமா எடுத்துகிட்டீங்கனா அதுல ஒரு forceம், clarityம், total understanding of lifeம், அப்பறம் various aspectsthat attract life இதைப் பத்தின understanding இருந்தாத்தான் நீங்க அவரை major poetன்னு சொல்ல