முடியும். அந்த வகைல பாத்தா இப்பொ சிறு சிறு தொகுப்புகள்தான் வந்திருக்கும். So we cannot say anything now. பிர: கவிதை ஒரு தொழிற்சாலை மாதிரி இன்னிக்கு ஆயிருச்சு. நிறைய உற்பத்தி செய்யப்படுது. அப்படிப்பட்ட இந்தக் கட்டத்துல நாம் இனம் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுப்போகுது. நீங்க ஒரு கவிதை இதழோட ஆசிரியர்ங்கற முறைல இதற்கு ஏதாவது அளவுகோல் வச்சிருக்கீங்களா? எப்படி நீங்க கவிதைகளைத் தேர்ந்தெடுக்கறீங்க? ஆத்: தொழிற்சாலைன்னு குறிப்பிடக்கூடிய கவிதைகள் எல்லாமே துணுக்காகவோ இல்லை விடுகதைகளாகவோ இந்த வகைப்பட்ட கவிதைகளாகவோதான் இருக்கு. அந்தமாதிரி கவிதைகள் மொத்தத்தையும் நீங்க ஒதுக்கித் தள்ளிட்டுப் பாத்தீங்கனா நாங்க editபண்ற பத்திரிகைக்கு வரக்கூடிய கவிதைகள்ல வந்து ஒரு use of language, idea, thoughtஅப்பறம் ஒரு inner beautyன்னு சொல்றாங்க - அதை explain பண்றது கஷ்டம் - அந்த inner beauty, உள்ளழகு ஒரு organic element, அந்த poetryயோட structureல இருக்குன்னா அந்தக் கவிதையை நாங்க பிரசுரிக்கிறோம். அதுல ஏதாவது ஒரு சில elements இருந்தாக்கூட போடறோம். அந்த வகைலதான் கவிதைகளைத் தேர்வு செய்ய முடியறது, வேற எந்த set-rulesம் கிடையாது. பிர: ஒரு வாசகனோட ‘status-quo’வை disturb பண்றது நல்ல கவிதைங்கற அளவுகோலை ஒரு உச்சமான தேர்வா வைக்கலாமா? ஆத்: கண்டிப்பா. இந்த statement உடன் நான் முழுக்க ஒத்துப் போறேன். பிர: நல்ல கவிதை ‘இரும்பு - மனோநிலை’யை disturb பண்றது... ஆத்: பாதிக்கிறது. பிர: அது தன்னோட உலகத்துக்குத்தான் வாசகனை இழுக்கிறது. இதுக்கு எதிர்மறையா ஒரு நர்சரி ரைமை எடுத்துக்கலாம். பா - பா ப்ளாக் ஷீப்ங்கற ரைமைப் படிக்கும்போது நாம் disturb ஆகறதில்லை. ஓஹோ! அப்படியான்னுதான் கேக்கறோம். ஆனா சில கவிதைகளைப் படிக்கும்போது நாம நம்பளையே மறந்துடறோம்... ஆத்: We are moved. பிர: ஆமாம். We don’t forget ourselves... ஆத்: We are moved. பிர: நாம கவிதையோட உலகத்துக்கு எடுத்துட்டுப் போகப்படறோம். உதாரணமா அக்னிக்குஞ்சொன்று கண்டேன்கற பாரதியோட கவிதையைச் சொல்லலாம். கவிதையை இனம்காணறதுக்கு இதை ஒரு நல்ல அளவுகோல்னு சொல்லலாம் இல்லையா? |