பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்251

ஆத்: கண்டிப்பா. இது மிக முக்கியமான அளவுகோல். இதை வெச்சுதான் நாம் கவிதை இயலையே தீர்மானம் செய்யமுடியும். அப்படின்னுதான் நினைக்கிறேன்.

பிர: முதல் நபர் பார்வையில் சொல்லப்படற கவிதை, முன்னிலைப்படுத்தப்பட்ட கவிதை, இவை இரண்டுமே அதிகம் சிரமம் தரவில்லை. இது இல்லாம narratorனு ஒருத்தர் இல்லாத ஒரு omniscient view, point of view அந்த மாதிரி narratorம் இல்லாம, நானும் இல்லாம, நீயும் இல்லாம சிலர் கவிதை எழுதறாங்க. அந்த கவிதைகள் ரொம்ப சிக்கலா இருக்கு. இதுபற்றி?

ஆத்: இந்தமாதிரி கவிதைகள் ரொம்ப கம்மி. ஒண்ணு தன்னிலைபடுத்தியோ இல்லைனா முன்னிலைப்படுத்தியோதான் பெரும்பாலான கவிதைகள் எழுதப்படறது. ஏன்னா அதுதான் simpleஆக இருக்கு communicationக்கு. இப்போ வெறும் description மட்டும் ஒரு கவிதைல நீங்க குடுக்கறீங்கனா அது எப்போதுமே complexஆகதான் இருக்கும்னு சொல்லமுடியாது. ஏதாவது சில சமயம்தான் complexஆக இருக்கும். அந்தமாதிரிக் கவிதைகள் எல்லாமே சிக்கலா இருக்கும்னு என்னால ஒத்துக்க முடியாது. ஆனா இந்த மாதிரிக் கவிதைகள் சிக்கலாறதுக்கு முதல்ல நாம obscurity பத்தி பேசின விஷயங்களைத்தான் மறுபடியும் நினைவுபடுபத்திக்கணும்.

பிர: தமிழ்ல கவிதை இயக்கமா வளர்ந்திருக்குன்னு உங்களால சொல்ல முடியுமா?

ஆத்: ஆரம்பத்திலிருந்தே ஒரு இயக்கமாதான் கவிதை இருந்திருக்கு. ஆனா அதுல பல போக்குகள் உருவாகியிருக்கு. ஒவ்வொரு கால கட்டத்திலயும் ஒவ்வொரு விதமான போக்குகள் உருவாறது. ஒரு சிலர் யதார்த்தத்தைக் கடைபிடிச்சாங்க. சிலர் வேற வெளிப்பாட்டுமுறைகள்ல வித்தியாசம் காட்டினாங்க - படிமங்கள் மூலமா தங்களை வெளிப்படுத்திக்கமுயன்றாங்க. தமிழ்ல எப்போதுமே கவிதை இயக்கமாதான் இருந்திருக்குன்னு சொல்ல முடியும். ஆனா பல போக்குகள் இருக்கு. ஒரு போக்கு அழியறது. இன்னொரு போக்கு உருவாறது. இல்லனா இரண்டு மூன்று போக்குகள் parallelஆக வளர்ந்திட்டிருக்கு. இந்த மாதிரிதான் இயக்கத்தைப்பத்தி என்னால சொல்ல முடியும்.

பிர: கடைசியா இன்னொரு கேள்வி. நிறைய வார, மாதப் பத்திரி கைகள்லவர்ற கவிதைங்க கவிதையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு என்ன விளைவைக் கொடுக்கும்?

ஆத்: கண்டிப்பா கவிதையோட ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு நீங்க சொன்ன கவிதைகள் அடிகோலாகாது. ஏன்னா அதுல போலியான கவிதைகள்தான் கவிதைகள்ங்கற பேர்ல வெளியாறது. அதைப்படிக்கறவங்க அதுதான் கவிதை அப்படின்னு நம்பற வாய்ப்புகள் அதிகமா இருக்கு, அதுல genuineஆன கவிதைகள். சிறு பத்திரிகைகள்ல எழுதக்கூடிய கவிஞர்களோட கவிதைகள் வரும்போது அவங்களுக்கு கொஞ்சம் differentஆன reading material கிடைக்கிறது. இப்ப