Who is this man Whose silence is so commanding no one violates the frontier of his mind when he journeys to the land of his visions to populate that which he created, seeking new faces where, even today, other travellers are almost unknown.
-Anonymous அன்புள்ள பிரம்மராஜன், மேற்கண்ட வரிகள் எதிலிருந்தோ பிரதி எடுத்திருந்தேன் எழுதியவர் பெயரின்றி, என்னவோ தோன்றியது உங்களுக்கும் தெரிவிக்கலாம் என்று. நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் நேரில்தான் விளக்க இயலும். Cre-actionary எவ்வளவு தூரம் Moralistஆக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை நீங்கள் உங்கள் பாணியிலேயே எழுதினால் நன்றாக இருக்கும். என்னுடைய copyயாரோ எடுத்துக்கொண்டுள்ளார்கள். Almost தொலைந்துபோனது மாதிரிதான். எனக்கு நினைவு உள்ளவரை எழுத முயற்சிக்கிறேன். நீங்களும் எழுதுங்கள். இரண்டையும் amalgamate செய்துவிடலாம். மீட்சியைப் பொறுத்தவரையில் நான் எந்த அளவு அதன் அமைப்பை நிர்ணயிக்கும் பணியில் செயல்படலாம் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்கள் நல்ல நண்பன் என்ற முறையில் சில கருத்துக்களை அறிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மீட்சி அடிப்படையில் படைப்பிலக்கியப் பத்திரிகையாக இருந்துகொண்டு மற்ற அக்கறைகள் சார்ந்தவற்றிற்கு இரண்டாம் இடம் கொடுக்க வேண்டும். ஆண்டின் முதல் இதழில் முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பிற்கு (எவ்வளவுதான் முக்கிய விஷயமென்றாலும்) இடம் கொடுக்க வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் கடிதத்துடன் ஒரு கவிதை அனுப்புகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் மீட்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மையம் சில தினங்களுக்கு முன்பே இரண்டு பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் End தபாலாபீசில் விசாரியுங்கள். இரண்டு சிகரங்களின் கீழ் இன்னும் சில தினங்களில் உங்களுக்குக் கிடைக்கும். இன்னும் ஒரு பிரதி மையம் சுகுமாரன் அவர்களிடம் கொடுத்தனுப்பியுள்ளேன். Iowa Anthology குறித்து (முதலில் ஒரு தகவலைச் சரிசெய்து கொள்ளவேண்டும். க. நா. சு. குமாரி பிரேமலதாவைக் குறிப்பிடவில்லை. பேட்டியில் உடனிருந்த நண்பர் (Bangalore) சென்ற வாரம் சென்னையில் அதைத் தெரிவித்தார். ) க. நா. சு. ஞா. கூவிடம் கவிதை தேர்ந்தெடுக்க என் மூலமும், நகுலன், அ. மி. மூலமும் கேட்டுள்ளார். ஞா. கூ. கூட சுமார் 70 கவிதைகள் தேர்வு செய்து அ. மியிடம் கொடுத்துள்ளார். சா. கந்தசாமியிடம் தேர்வைப் பற்றி அ. மி. குறைபட்டுக் கொண்டுள்ளார். (It is absolutely irrelevant. ) இதற்கிடையே இன்னொரு செய்தி கிடைத்துள்ளது. க. நா. சு. , ஞா. கூவைத் தவிர தமிழவனிடமும் |