P. S. Krishnaswamy (ப. ஸகதேவன்) பெங்களூர் Christ College இடமும் கவிதைகள் தேர்வுசெய்யக் கூறியுள்ளார். அவர் deviate ஆனதே தவறு. அப்படியே ஆகியிருந்தாலும் who is this Krishnaswamy? என்ன competency அவருக்கு இருக்கிறது? எப்படி இந்த மூவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்த இயலும்? நான் என் வருத்தத்தை ஞா. கூவிடம் கூறியுள்ளேன். Proposed Major Anthologyஐ drop செய்து தனது தேர்வில் ஒரு தொகுதி ஜனவரிக்கு மேல் கொண்டுவரலாம் என்று அவர் என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து எவரிடமும் கேட்காதீர்கள். எப்படி இருந்தாலும் Penguin மாதிரி ஆகாது என்று நினைக்கிறேன்.
Who is an anarchist? கட்டுரைக்குத் தேவையான குறிப்புகளை நீங்கள் அதன் சுருக்கமான History-development-some major statements of old and modern Anarchists ஆக ஒரு கட்டுரை எழுதிவிடுங்கள். நான் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் West அதன் manifestation மற்றும் கலை இலக்கியத்தில் அதன் தொடர்ச்சி ஆகியவற்றை எழுதுகிறேன். அது குறித்து உங்கள் கருத்துக்களைக் கூறவும். நீங்கள் அனுப்பும் கவிதைகள் ‘ழ’வில் பயன்படுத்திக்கொள்ளப்படும். ராஜகோபாலனிடம் கதை கேட்கிறேன் மீட்சிக்கு. நீங்களும் உடனே கடிதம் எழுதுங்கள். மேலும் அவரிடம் சில நல்ல கவிதைகளும் உள்ளன. அவற்றையும் கேளுங்கள். ஆனந்த் அவரைப் பொறுத்தவரை ராஜகோபாலனின் சாதாரணக் கவிதை ஒன்றை ஸ்வரத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளதை ஓரிருமுறை பிரஸ்தாபித்துள்ளார். இது உங்கள் தகவலுக்கு மட்டும்தான். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் குறித்து நீங்கள் நேரடியாக ராஜகோபாலனைக் கேட்டுக்கொள்ளுங்கள். Press Billலிருந்து தற்போதுதான் ஓரளவு ‘ழ’ வெளியில் மீண்டுவருகிறது. மௌனியின் அரூபத் தன்மையால் கவரப்பட்டு சிலர் அவருக்கு சித்தர் பட்டம் கொடுக்கிறார்கள். Of course he is a great writer who is equally great being discussed. ஏதோ ஒரு வகையில் க. நா. சு, கந்தசாமி ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன். சமீபத்தில் கந்தசாமி என்னிடம் 25 வருடங்களுக்கு முன் மொழிபெயர்த்த ஜியார்ஜ் ஆர்வெல்லின் 1984 என்னும் நாவலை (தமிழில் முத்தண்ணா) எங்கேனும் கிடைக்கிறதாஎன்று தேடச் சொன்னார். அது வெளியான ஆண்டு, பதிப்பாளர் ஆகிய விவரங்களைக் கேட்டதற்கு ஒரு மாதிரி பதில் சொன்னார். அதனை உடனடியாகப் பிரசுரம் செய்வதில் ஒரு அதீத ஆர்வத்துடனிருந்தார். ஞானக்கூத்தனும் எனக்கு அதிக விவரங்கள் தெரிவிக்கவில்லை. Animal Farm எழுதிய Orwellன் 1984 பற்றி ஏன் அப்படி அவசரப்பட வேண்டும் என்றுநீங்கள் யோசியுங்கள். Mysore Dhvandyaloka - The Literary Centre for English Studies and Indigenous Artsல் இருந்து Bookletம் leafletம் வந்திருக்கிறது. அங்கே ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் வரை தங்கி ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையானதுறைகளில் ஈடுபடலாம். நான்... மாதம் போகலாம் என்று எழுத இருக்கிறேன். அவர்கள் விரும்பினால் அதற்கு முன்பேகூடப் போக உத்தேசித்திருக்கிறேன். தற்காலத் தமிழ்க்கவிதைகளில் சமூக மற்றும் |