உளவியல் பாங்கு (Social and Psychological Attitudes in Contemporary Tamil Poetry) என்ற தலைப்பில் சில கட்டுரைகள் எழுதலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் suggestion கூறுங்கள்.
நீங்கள் பயன்படுகத்தாத என்னுடைய புத்தகங்களை அன்புடன் அனுப்பிவிடுங்கள். Hamburger புத்தகத்துடன். பிறகு சில எதிர்கால நிஜங்கள் சம்பந்தப்பட்ட ஓவியங்களை உடனடியாகப் பதிவுத் தபாலில் அனுப்பிவிடுங்கள். ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் ஒரு முன்னுரையை எழுதி அனுப்பிவிடுங்கள். தொகுதியின் கவிதைத் தலைப்புகளை இணைத்துள்ளேன். நீங்கள் சேலத்தில் கழிக்கும் 4 நாட்கள் சென்னையில் கழிக்கலாம். உங்கள் அன்பான அழைப்பிற்கு நன்றி. நானும் மிகவும் ஆவலுடன் உங்களைச் சந்திக்கும் நாளை எதிர்பார்க்கிறேன் சீக்கிரத்தில் குட்டித் தங்கைக்கு வாழ்த்துக்கள். அன்புடன் ஆத்மாநாம் |