என்றொரு அமைப்பு இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும் ஒருகட்டிட வரைபடத்தையும் ஒரு சாலை விவரக் குறிப்பையும் ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதத்தையும்   ஒருஅலுவலகத்தின் ஆணைகளையும் இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை ஒரே ஒரு கவிதையை மட்டுமே எழுதும் தலைப்பு தானே உருவாகும் எலும்புகளைப் பற்றி ஆய்வு செய்தவனுக்கு ஒன்று துல்லியமாய்த் தெரிந்தது எலும்புகளும் நம்மைப் போலவே வாழ்கின்றன வீடுகளில் பொட்டல் காடுகளில் வயல்வரப்புகளில் அவைகளுக்கும் அரசர்களும் மந்திரிகளும் போர் வீரர்களும் என்றொரு அமைப்பு |