கனவு என்னுடைய கனவுகளை உடனே அங்கீகரித்துவிடுங்கள் வாழ்ந்துவிட்டுப் போனேன் என்ற நிம்மதியாவது இருக்கும் ஏன் இந்த ஒளிவுமறைவு விளையாட்டு நம் முகங்கள் நேருக்கு நேர் நோக்கும்போது ஒளி பளிச்சிடுகிறது நீங்கள்தான் அது நான் பார்க்கிறேன் உங்கள் வாழ்க்கையை அதன் ஆபாசக் கடலுக்குள் உங்களைத் தேடுவது சிரமமாக இருக்கிறது அழகில் நீங்கள் இல்லவே இல்லை உங்கள் கனவு உலகத்தைக் காண்கிறேன் அந்தக் கோடிக்கணக்கான ஆசைகளுள் ஒன்றில் கூட நியாயம் இல்லை தினந்தோறும் ஒரு கனவு அக்கனவுக்குள் ஒரு கனவு உங்களைத் தேடுவது சிரமமென்று நான் ஒரு கனவு காணத் துவங்கினேன் உடனே அங்கீகரித்துவிடுங்கள் |