பக்கம் எண் :

48ஆத்மாநாம் படைப்புகள்

என்னை மூழ்கடிக்கும்
தணல் சூழ்ந்து வரினும்
எழ மாட்டேன்
கிடைக்குமா ஒரு இடம்
உட்காருவதற்கு
சரித்திரத்தின் புதைமணலில்
நான் அமிழ
காலக்கணக்கில்
உயிர் கிடைக்கும் எனக்கு
வழக்கம் போல்
இடமொன்று வேண்டும்
உட்காருவதற்கு