பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்51

உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்குப் போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்

சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே