மனத்தின் கவிதைகள் 1. கழிவறையின் விட்டத்தைப் பார்த்தான் தூக்கில் அவன் தொங்கப் போவதில்லை எனினும் பார்த்தான் 2. பேருந்துக் கம்பிக்கு வெளியே அவன் கை பிய்த்துக்கொண்டு விழுந்தன விரல்கள் சிலிர்த்து விரல்களைச் சேகரித்து தொடர்ந்தான் மேலும் அவன் பயணம 3. கூட்டம் காத்துக்கொண்டிருந்தது அவரும் ஆரம்பித்துவிட்டார் காமிராக்கள் இயங்கிக்கொண்டிருந்தன திடீரென இயந்திரத் துப்பாக்கி நின்றுவிட்டது உலகம் ஒரு கணம் அவனைச் சுற்றி ஒரு கூட்டம் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் அவனுக்குள் தொடர்ந்து ஒரு கணம் கூட்டம் முடிந்து அவரைச் சுற்றி ஒரு கூட்டம் 4. கடலலைகள் ஓய்வின்றி ஓய்ந்துகொண்டிருந்தன அவனைச் சுற்றிக் கொஞ்சம் கொஞ்சமாய் மீன்கள் கடிக்கத் துவங்கின தூர நின்று பார்க்க மட்டும் முடிந்தது 5. குழந்தை அழ ஆரம்பித்தது உறவுகள் நகைப்புக்குரியதாயிருந்தன |