பக்கம் எண் :

68ஆத்மாநாம் படைப்புகள்

நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது

அமைதியாய் இருப்பதை
உணர்ந்தும்
நான் வேறு ஆகிவிட்டேன்

நானும் வேறான நானும் பொய்

நான் இல்லை