பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்69

நிகழா நிகழ்வு

தனியொன்றாய்த்
திரண்டெழுந்தது
ஒற்றை மேகம் எனக்குள்
கனவுகள் கலைய
மீண்டும் ஒரு முறை
எழுந்தேன்
இசைத்தது ஒரு நினைவு
துவங்கிற்று ஒரு நடனம்
அரங்கேறிற்று ஒரு நாடகம்
சிலைத்தது ஒரு நிகழ்வு
இருப்பிடத்தில் நகர்ந்தது
ஒரு கணம்

தனியொன்றாய்த்
திரண்டெழுந்தது
ஒற்றை மேகம் எனக்குள்