தான் தான் தான்தான் முதலில் ஒளிக்கீற்றுக்காய்ப் பிறந்ததாய்ப் போரிடத் துவங்கிற்று கும்மிருட்டில் ஒவ்வொரு கண்ணும் இன்னொரு கண்ணைத் தேட ஆரம்பித்தது எப்படியும் ஒரு மந்திர ஒளிக்கீற்றில் ஒரு கண் துலங்கும் என அண்டப் பெரு வெளியில் எக்கண்ணுக்கும் படாமல் மாயமாய் மறைந்தது ஒளிக்கீற்று |