பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்85

மஹா ஜனம்

மேலும் கீழும் மெல்லிய உதடுகள்
பற்களை உள்ளே மறைக்கும் வாய்கள்
காற்றைச் சுரண்ட முட்டும் மூக்குகள்
முழிக்கும் கண்கள் மேலே நெற்றிகள்
கோரை முடிகள் கட்டாந்தலைகள்
இருளும் ஒளியும் இல்லா வெளியில்
அகன்ற பரப்பில் லட்சம் தலைகள்
கண்கள் மேய்ந்து கண்கள் மேய்ந்து
அலுப்பில் திரும்ப மீண்டும் தலைகள்
கனவில் தெரியும் நினைவில் தெரியும்
எழுத்தில் வழிந்து தெருவில் நகரும்