பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்95

வெளிறிப்போன பல்லிகளும்
இன்னும் சில
ஜீவராசிகளும்
கூட்டணிகள் அமைத்துப்
போராடத் தயாராயின
அதற்குள் எலும்புக்கூடுகள்
ஓட்டுச் சீட்டைக்
கையில்
தயாராய் வைத்துக்கொண்டன

* இதே தலைப்பில் ஞானக்கூத்தனின் கவிதை ‘அன்று வேறு கிழமை’தொகுதியில் இடம் பெற்றுள்ளது. எனவே ஆத்மாநாம் தனது கவிதையை இரண்டாம் பதிப்புஎன்று பெயரிட்டிருக்கிறார்.